உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) நிறைவு விழா

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகவங்கியின் நிதியீட்டத்தில் 2019 - 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் (LDSP) நிறைவு விழா 2024.12.27ம் திகதியன்று வடமாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் LDSP திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைகளை பௌதீக ரீதியாகவும், நிதியியல் ரீதியாகவும் உரிய காலத்தில் பூர்த்திசெய்தமைக்காக எமது சபைக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இக்கௌரவத்தினை பெறுவதற்கு எமது சபை சார்பாக ஒத்துழைப்புக்களை வழங்கி இரவுபகல் பாராது முழு அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய எமது சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருக்கும் எமது சபை சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.