நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் பொருட்டு சபையினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் ஓர் பகுதியாக இவ்வாண்டும் சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் கீழ் சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்சார் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்க சபையினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள சபை எல்லைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் சபையின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 2024.08.09 திகதிக்கு முன்னர் கையளிக்க முடியும்.
கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கு அமைவாக பொருத்தமான பயிற்சி நெறிகள் தெரிவு செய்யப்படும்.