மாவட்ட செயலரின் அறிவுறுத்தலுக்கமைய எமது சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சகல வியாபார நிறுவனங்களிலும் வர்த்தகர்களினால் பயன்படுத்தப்பட்டு வரும் சகல நிறுவை, அளவை மற்றும் நிறுக்கும் அளக்கும் உபகரணங்களினை 2025 / 2026 ஆம் ஆண்டிற்கான பரிசோதனை செய்தல், சரி பார்த்தல் மற்றும் முத்திரை பதிக்கும் செயற்பாடுகள் கீழ்க்குறிப்பிடப்படும் கால அட்டவணைக்கமைய நடைபெறவுள்ளது.
தொ.இல |
திகதி |
நேரம் |
இடம் |
1 |
2025.03.17 |
மு.ப 9.00 – பி.ப 1.00 வரை |
நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், கொக்குவில் |
2 |
2025.03.18
2025.03.19 2025.03.20 2025.03.21 |
மு.ப 9.00 – பி.ப 1.00 வரை |
நல்லூர் பிரதேச சபை உப அலுவலகம், திருநெல்வேலி |
எனவே வர்த்தகர்கள் அனைவரும் மேற்குறித்த தினங்களில் தங்கள் வியாபார நிலையங்களில் உள்ள சகல நிறுவை, அளவை உபகரணங்களினையும் பரிசோதனைக்குட்படுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.