பொதுமக்களிற்கான விசேட அறிவித்தல் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2023
‘ இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதன் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்து முகாமை செய்தல்’ என்னும் செயற்றிட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரத்தில் நல்லூர் பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கென சபையினால் பின்வரும் இடங்களில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் அகற்றப்படாமல் தேங்கியுள்ள இலத்திரனியல் கழிவுகளை கையளிக்க முடியும்.
2023.08.07 கொக்குவில் பொது நூலக அருகாமை
2023.08.08 கோண்டாவில் உப்புமடம் சந்தி
2023.08.09 கோண்டாவில் பேருந்து சாலை முன்பாக
2023.08.10 கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் கோவில் அருகாமை
2023.08.11 பலாலி வீதி தபால்பெட்டி சந்தி அருகாமை
2023.08.12 அரியாலை உதயபுரம் சந்தி அருகாமை
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களிற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைக்கவும்.
021 222 2700
070 222 2700