சபையின் 2024ம்ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட தயாரிப்பு தொடர்பான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ‘ பால்நிலை பொறுப்புள்ள வரவு செலவுத் திட்டம் (Gender Responsive Budgeting) என்னும் தலைப்பிலான தெளிவூட்டல் கருத்தரங்கு அண்மையில் சபையின் கலந்துரையாடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்;, சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் சமூக உறுப்பினர்கள் எவ்வாறு வரவு செலவு திட்ட தயாரிப்பு செய்முறையில் பங்களிக்க முடியும் என்பது தொடர்பிலும் செயற்திட்ட தெரிவில் பால்நிலை சார் செயற்திட்டங்கள் ஏன் அவசியம் என்பது தொடர்பிலும் மிகச்சிறந்த முறையில் வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகின் வளவாளரால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.