வரலாற்றுப் பின்னணி இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களின் வரலாற்றில் காலம் சென்ற பிரதமர் S.W.R.D பண்டாரநாயக்கா அவர்கள் உள்ளூராட்சி அமைச்சராக பணியாற்றிய காலத்திலேயே உள்ளூராட்சி மன்றங்கள் மறுமலர்ச்சி அடைந்தன. இது ஓர் வரலாற்று நிகழ்வாகும். நல்லூர் பிரதேச சபையின் வரலாற்றில் நல்லூர் கிராம சங்கம், கொக்குவில் கிராம சங்கம் என்னும் இரு சபைகள் சுயமாக இயங்கின. சில வருட காலத்தில் இவை கிராம சபைகள் என பெயர் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. இச்சபைகளின் செயற்பாடுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இச்சபைகளின் நிர்வாகத்தை ஒழுங்காக மேற்கொள்வதற்கு கிராமசபைக்கட்டளைச் சட்டமும் அதன் கீழ் ஆக்கப்பட்ட உபவிதிகளும் வழிவகுத்தன. உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் முன்னேற்றகரமான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் 1980ம் ஆண்டின் 35ம் இலக்க மாவட்ட அபிவிருத்திச் சபைச் சட்டத்தின் மூலம், கிராம சபை, பட்டின சபைகளாக இயங்கிய உள்ளூராட்சி மன்றங்களை இணைத்து மாவட்ட அபிவிருத்திச் சபை என்னும் பெயரில் 1981 யூலை மாதம் முதல் செயற்படுத்த ஆரம்பித்தது. மாவட்ட அபிவிருத்திச்சபை நிர்வாகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி வெற்றியளிக்காததால் 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தை அரசாங்கம் அமுலுக்குக் கொண்டு வந்து இதன் மூலம் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள் அடங்கும் (1981 யூலை மாதத்திற்கு முன்னைய) கிராம சபைகள், பட்டின சபைகள் இணைக்கப்பட்டு பிரதேச சபைகள் என 01.01.1988ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. யாழ் மாவட்டத்தில் இயங்கும் பிரதேச சபைகளுள் முதன்மையானதும் ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு முன்மாதிரியாகவும் செயற்படும் நல்லூர் பிரதேச சபையினது ஆரம்ப கால வரலாற்றினை நோக்கும் போது கொக்குவில், நல்லூர் ஆகிய இரண்டு கிராமங்களையும், 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. இதில் நல்லூர் கிராம சபையில் 12 வட்டாரங்களும், கொக்குவில் கிராம சபையில் 16 வட்டாரங்களும் காணப்பட்டன. ஆரம்ப காலத்தில் நல்லூர் பிரதேச சபையானது நல்லூர் கிராம சங்கம், கொக்குவில் கிராம சங்கம் என்ற இரு பிரிவுகளாக இயங்கி வந்தது. சில காலத்தின் பின்பு கிராம சபைகளாக பெயர் மாற்றப்பட்டு அவற்றின் செயற்பாடுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. இச்சபைகளின் நிர்வாகத்தை ஒழுங்காக்குவதற்காக கிராம சபைக் கட்டளைச் சட்டமும் அதன் கீழ் ஆக்கப்படும் உபவிதிகளும் வழிவகுத்தன. நல்லூர் கிராம சபையாக இயங்கிய காலத்தில் பின்வருவோர் சபையின் தலைவர்களாகவும் விசேட ஆணையாளர்களாகவும் செயற்பட்டனர்.

சபையின் முன்னாள் தலைவர்கள்:

  1. திரு.சி.தம்பிமுத்து - திருநெல்வேலி
  2. திரு.ச.கார்த்திகேசு - திருநெல்வேலி
  3. திரு.V.V.கருணாநிதி - திருநெல்வேலி
  4. திரு.N.K.நல்லதம்பி - திருநெல்வேலி
  5. திரு.மு.கி.கார்த்திகேசு - சட்டநாதர் வீதி, நல்லூர்.
  6. திரு.சி.வெற்றிவேலு - திருநெல்வேலி
  7. திரு.ச.கா.சபாபதி - ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி
  8. திரு.கே.எஸ்.செல்லையா - அம்மன் வீதி, திருநெல்வேலி
  9. திரு.கி.துரைசிங்கம் - சட்டநாதர் வீதி, நல்லூர்
  10. திரு .பொ.குமாரகுலசிங்கம் - திருநெல்வேலி
  11. திரு. ந.தில்லைவினாயகம் - செல்லர்வீதி, நல்லூர்
சபையின் முன்னாள் விசேட ஆணையாளர்கள் :
  1. திரு.A.A.ஜோசப் - சிரேஸ்ட ஆய்வு உத்தியோகத்தர், உள்ளூராட்சித்திணைக்களம்.
  2. திரு.கா.மாணிக்கவாசகர் - உள்ளூராட்சி உதவி ஆணையாளர்,யாழ்ப்பாணம்
  3. திரு.ந.அமுதசாகரன் - உதவி அரசாங்க அதிபர்
  4. திரு.என்.நல்லைநாதன் - உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்
  5. திரு.அன்ரன் அல்பிரட் - உள்ளூராட்சி உதவி ஆணையாளர், யாழ்ப்பாணம்
  6. திரு.பி.பாலசிங்கம் - உதவி அரசாங்க அதிபர்
  7. திரு.க.சண்முகநாதன் - உதவி அரசாங்க அதிபர்
  8. திரு.ஆ.மகாலிங்கம் - நிர்வாக உத்தியோகத்தர் (கல்வித்திணைக்களம்)
கொக்குவில் பிரதேச சபையில் பின்வருவோர் சபைத் தலைவர்களாகவும், விசேட ஆணையாளர்களாகவும் செயற்பட்டனர். சபையின் முன்னாள் தலைவர்கள்
  1. திரு.சி.முத்துவேலர் - கொக்குவில்.
  2. திரு.சி.நவரத்தினம் - கோண்டாவில் கிழக்கு.
  3. திரு.சி.அருளம்பலம் - பொற்பதி வீதி, கொக்குவில்.
  4. திரு.சி.இரத்தினசிங்கம் - கோண்டாவில் கிழக்கு
  5. திரு.சி.க.சபாபதி - கோண்டாவில் கிழக்கு.
  6. திரு.க.மணிபல்லவராஜன்
சபையின் முன்னாள் விசேட ஆணையாளர்கள்
  1. திரு.எஸ்.தொம்மைப்பிள்ளை
  2. திரு.எஸ்.பரம்சோதி - சிரேஸ்ட ஆய்வு உத்தியோகத்தர், உள்ளூராட்சித்திணைக்களம்
  3. திரு.இ.புஸ்பராசா - மாவட்ட உத்தியோகத்தர், விவசாயத்திணைக்களம்.
  4. திரு. ந.அமுதசாகரன் - உதவி அரசாங்க அதிபர்
  5. திரு.க.சபாபதிப்பிள்ளை - உதவி அரசாங்க அதிபர்
1980களைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் 1980ம் ஆண்டின் 35ம் இலக்க மாவட்ட அபிவிருத்தி சபை சட்டத்தின் மூலம் நல்லூர் கிராம சபையும், கொக்குவில் கிராம சபையும் இணைக்கப்பட்டு மாவட்ட அபிவிருத்தி சபையின் உப அலுவலகங்களாக 1981 யூலை முதல் செயற்பட ஆரம்பித்தன. இக்காலத்தில் மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக திரு.சு.நடராசாவும், செயலாளராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.தேவநேசன் நேசையா அவர்களும் செயற்பட்டனர்.மாவட்ட அபிவிருத்தி சபையின் நல்லூர் உப அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களாகவும் பின்வருவோர் கடமையாற்றினர்.
  1. திரு.பி.பாலசிங்கம் - (உதவி அரசாங்க அதிபர்) நிர்வாக உத்தியோகத்தர்.
  2. திரு.ச.கருணைநாதன் - அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.
  3. திரு.இராசா. தணிகாசலம் - அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.
  4. திரு.க.சிவபாதம் - அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.
  5. திரு.மு.குணபாலசிங்கம் - அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.
மாவட்ட அபிவிருத்தி சபையின் கொக்குவில் உப அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர்களாகவும் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்களாகவும் பின்வருவோர் கடமையாற்றினர்.
  1. திரு.D.வாமதேவன் - (உதவி ஆணையாளர் தே.வீ.திணைக்களம்) நிர்வாக உத்தியோகத்தர்.
  2. திரு. க.சிவபாதம் - அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.
  3. திரு . இராசா. தணிகாசலம் - அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.
  4. திரு.வீ. யோகரத்தினம் - அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர்.
எனினும் மாவட்ட அபிவிருத்தி சபை நிர்வாகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தி வெற்றியளிக்காமையால் ஒவ்வொரு உதவி அரசாங்க அதிபர் பிரிவினுள்ளும் அடங்கும் கிராம சபைகள், பட்டின சபைகள் என்பவற்றை ஒன்றாக இணைத்து பிரதேச சபைகளை உருவாக்கவென 1987ம் ஆண்டின் 15ம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தை அரசாங்கம் அமுல் செய்தது. இதற்கமைய 01.01.1988 முதல், கிராம சபைகளாக இயங்கிய கொக்குவில் கிராம சபையும் நல்லூர் கிராம சபையும் இணைக்கப்பட்டு பிரதேச சபையாக செயற்பட ஆரம்பித்தது.இக்காலப்பகுதியில் பிரதேச சபைக்கான தேர்தல் நடாத்தப்படாமையினால் விசேட ஆணையாளர் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடாத்தப்பட்டது. இக்காலத்தில் பின்வருவோர் விசேட ஆணையாளர்களாக செயற்பட்டு வந்துள்ளனர்.
  1. திரு.க.சண்முகநாதன் (உதவி அரசாங்க அதிபர்)செயலாளர் திரு.இராசா தணிகாசலம்
  2. திரு.ஆ.மகாலிங்கம் (உதவி அரசாங்க அதிபர்)
  3. செயலாளர் திரு.சோ.கிருஸ்ணதாசன்
  4. திருமதி.கமலா சிவசிதம்பரம் (பிரதேச செயலர்)
  5. செயலாளர்திரு.பொ.வைரமுத்து
  6. திரு.சி.வேல்முருகோன்பிள்ளை (உதவி அரசாங்க அதிபர்)
இக்காலத்தில் சபையின் செயலாளராக திரு.செ.செல்வரத்தினம் அவர்கள் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து 2003ல் செயலாளர் திரு.பொ.வைரமுத்துவின் கீழ் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கடமையுணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட்டனர். தொடர்ந்து செயலாளர்களாக திரு எம் சாந்தசீலன், திருமதி.எஸ்.அன்னலிங்கம், திரு.சு.சுதர்ஜன் ஆகியோர் வினைத்திறனாக வழிநடத்தியதுடன் தற்போதைய செயலாளர் திரு.யு.ஜெலீபன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கடமையுணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட்டு வருகின்றனர்.