புவியியல் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரைபடங்களை இடம்சார்ந்த மற்றும் பண்பு சார்ந்த தரவுகளை உள்ளூர் அதிகார சபையில் உருவாக்குவதலானது நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தல், குடிமக்களிற்கு சிறந்த சேவைகளை வழங்குதல், உட்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புறத் திட்டமிடல், நிலைபேறான சுற்றுச்சூழல், அவசரகால முகாமைத்துவம் என்பவற்றிற்கு வினைத்திறனாகப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முதன்மை காரணியாக அமையும்.
அதனடிப்படையில் யாழ் பல்கலைக்கழக புவியியல் பீட இறுதியாண்டு மாணவர்களாகிய செல்வி சூ.சியாளினி, ரா.கவீதா சபையில் கடந்த 02 மாதகாலமாக உள்ளக பயிற்சியாளர்களாக செயற்பட்ட காலத்தில் வட்டார வரைபடத்தினை தயாரித்து வழங்கியமையிட்டு பெருமகிழ்ச்சியடைவதோடு, நல்லூர் பிரதேச சபையின் வட்டார வரைபட வழிகாட்டி அனைவருக்கும் ஒரு முக்கிய வளமாக அமையும்.