Farm to Gate

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு பங்குனி மாதம் FARM TO GATE செயலி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
FARM TO GATE ஊடாக விவசாயிகளிடமிருந்து, நுகர்வோர் நேரடியாக தங்களுக்கு தேவையான உற்பத்திகளை மொத்தமாகவோ அல்லது சில்லறை விலையிலோ கொள்வனவு செய்ய முடியும். இதனூடாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உற்பத்தி பொருட்களை காலவதியாகும் முன்னர் விற்பனை செய்துக்கொள்ள முடிவதுடன், நுகர்வோரும் தரமான, புதிய உற்பத்திகளை நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை FARM TO GATE ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
FARM TO GATE செயலியில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தரவுகள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், உற்பத்தி பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய இடம், உற்பத்திகளின் தரம், கையிருப்பிலுள்ள அளவு, விலை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தரவேற்றம் செய்யா்பட்டுள்ளது.
• நீங்களாகவே தளத்தில் சுயமாகப் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் அருகிலுள்ள உள்ளூராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு "Farm to Gate" இல் உங்களைப் பதிவுசெய்யுமாறு விடய உத்தியோகத்தரைக் கோரலாம்.
• Farm to Gate என்பது ஒரு இலவச சமூக சந்தைப்படுத்தல் தளமாகும். எனவே, Farm to Gate சேவைகளைப் பதிவுசெய்து பெறுவதற்கு எந்தவிதமான கட்டணமும் அறவிடப்படுவதில்லை.
• ஏதேனும் சிக்கல்கள் அல்லது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு 0707213728 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் மாகாண திணைக்களத்தின் பொறுப்பான அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது npfarmtogate@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமும் தொடர்புகளை மேற்கொள்ளலாம்.
• ஒரு உள்ளூர் தயாரிப்பாளர் மாதத்திற்கு 100 இடுகைகள் அல்லது விளம்பரங்களைச் சமர்ப்பிக்கலாம்.