கணக்குக் கிளை
நிதிப் பகுதியானது நிதி உதவியாளரையும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்களையும் கொண்டுள்ளது. சபையின் வருமானங்கள், செலவினங்கள் தொடர்பான சகல கணக்குகளையும் பேணுதல், பாதீடு தயாரித்தல், வருடாவருடம் பொதுச்சந்தைகள், கடைகளை குத்தகைக்கு வழங்குதல் மற்றும் ஏனைய நிதிசார் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் இப்பிரிவின் தலையாய பணிகளாகும்.
நல்லூர் பிரதேச சபையானது பல்வேறு வருமான மூலங்கள் மூலம் வருமானத்தினை உழைத்து, அதனை தனது பிரதேசமக்களுக்காக அபிவிருத்தி வேலைகளில் மிகவும் சிறப்பாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த வகையிலே பிரதான வருமான மூலங்களாக பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது.
01. ஆதனவரி
02. முத்திரைத் தீர்வை
03. திருநெல்வேலிச்சந்தை குத்தகைப் பணம்
04. கடைகளின் வாடகைப் பணம்
05. உரிமக்கட்டணங்கள்
06. நிலையான வைப்பு வட்டி
07. தனியார் குப்பை அகற்றுதல்
08. படிவ விற்பனை (கட்டிட விண்ணபப்படிவம், நூலக விண்ணப்பப் படிவம்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
சராசரியாக சபை வருமானமாக மாதாந்தம் ரூபா 4.8 மில்லியன் பெற்றுக்கொள்வதோடு, NELSIP , LGIIP போன்ற திட்டங்களின் மூலம் மூலதன நன்கொடைகளையும் பெற்றுக் கொள்கின்றது. ஈட்டுகின்ற வருமானத்திற்கு சரிநிகராக மாதாந்தம் சராசரியாக ரூபா 5.8 மில்லியன் தொகையினை அபிவிருத்தி வேலைகளில் (வீதி அபிவிருத்தி, பொதுச்சந்தை அபிவிருத்தி, மயான அபிவிருத்தி, விளையாட்டுக் கழகங்கள், சனசமூக நிலையங்கள்) செலவினங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வருமானம், செலவினங்களை சரியான முறையில் நிர்வகித்து, சபையின் வேண்டுகோளிற்கிணங்க, செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நல்லூர் பிரதேச சபையின் தனியான அமைப்பாக கணக்கு கிளை காணப்படுகின்றது.
கணக்குகிளையின் முக்கிய தொழிற்பாடுகள் வருமாறு,
1. வரவு செலவுத் திட்டத்தை உரிய காலத்தில் வெளியீடு செய்வதற்கு சபைக்கு உதவி செய்தல்.
2. முடிவுக் கணக்குகளை மார்ச் 31 திகதிக்கு முன்னர் கணக்காய்வு திணைக்களத்திற்கு அனுப்புவதற்கு உதவி புரிதல்.
3. வருடாந்த இருப்புக் கணிப்பீட்டை மேற்கொள்வதற்கு இருப்பு கணிப்பீட்டு சபைக்கு உதவுதல்.
4. மாதாந்த கணக்குகளை ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதிக்கு முன் உரியவர்களுக்கு அனுப்பி வைத்தல்.
5. கொடுப்பனவுக்காக வரும் உறுதிச் சீட்டுக்களை நிதிக்குழுவில் சமர்ப்பித்து சபையின் தலைவர், செயலாளர் ஆகியோரின் அனுமதியுடன் கொடுப்பனவுகளை உடனுக்குடன் காசோலை மூலம் மேற்கொள்ளுதல்.
6. உத்தியோகத்தர்கள், ஊழியர்களை ஊக்கப்படுத்தும் முகமாக சபையின் தலைவர் , செயலாளர் ஆகியோரின் அனுமதிக்கிணங்க 10 மாத சம்பள கடன் வழங்கி உதவுதல்.
7. சபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோரிற்கு திறைசேரியால் அறிவிக்கப்படும் சம்பள தினத்தில் சம்பளத்தினை வழங்க உதவிபுரிதல்.
8. கொள்வனவு செய்யப்படும் பொருட்களை களஞ்சியத்திற்கு எடுத்து பதிவேடுகளில் கணக்கியல் விதிகளுக்கு அமைவாக பதிவு செய்து பினனர் உரியவர்களுக்கு உரிய நடைமுறைகளுக்கு அமைவாக கையளித்தல்.
9. பெறுகை நடைமுறைகளுக்கு அமைவாக பொருட்களை கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக உரிய காலத்தில் சபையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கேள்வி கோரலும், பொருட்களை கொள்வனவு செய்து கொடுத்தலும்.
Revenue
Expenditure
Stampduty
Dates
Receipts Head wise