Author: Web Editor
கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 4ம் வார நிகழ்வு
சபையின் பதிவேடுகளில் ஆதன பெயர் மாற்றத்தின் அவசியம்
கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 3ம் வார நிகழ்வு
ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் யாஃ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் 16.08.2024 அன்று பி.ப 2.00 மணியளவில் வாசிப்பு முகாமின் 3ம் வார நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் லண்டனிலிருந்து வருகைதந்த சமூக தன்னாா்வலா் திருமதி.சுகந்தி சந்திரமோகன் (தமிழா் சமூக நடுவம்) அவா்களும் வைத்திய கலாநிதி க.சிவசுதன் அவா்களும் கலந்து வாசிப்பை நோக்கிய பயணத்திற்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்கினா்.
2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள்
நல்லூர் பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் சம்பந்தமான முன்மொழிவுகள் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த முன்மொழிவுகளை கடிதம், மின்னஞ்சல், வலைத்தளம் மற்றும் நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும். எதிர்வரும் 2024.09.06ஆம் திகதிக்கு முன்னராக கிடைக்கப் பெறும் முன்மொழிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்வதற்கு சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
முகவரி : செயலாளார், நல்லூர் பிரதேச சபை, 14/5 கருவப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கு
மின்னஞ்சல் : npsnallur@gmail.com
வலைத்தளம்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeKD0Zcy2Qffsb2_C6aUSrxcxeopRqjhrfb34Uwswn2sOrCCg/viewform
செயலாளர்
நல்லூர் பிரதேச சபை
Farm to Gate
முன்பள்ளி மாணவர்களிற்கான விளையாட்டு உபகரணம்
முன்பள்ளி மாணவர்களுக்கான மேசைகள் மற்றும் கதிரைகள்
உலக வங்கியின் நிதியீட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) Basic Tranche 04இல் LAPDPஇல் தெரிவு செய்யப்பட்ட உப கருத்திட்டத்தின் கீழ் சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களிற்கு பயனூட்டும் வகையில் 19 முன்பள்ளிகளுக்கு மேசைகள் மற்றும் கதிரைகள் வழங்கப்பட்டன.
நல்லூர் பிரதேச சபையின் வட்டார வரைபட வழிகாட்டி
புவியியல் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வரைபடங்களை இடம்சார்ந்த மற்றும் பண்பு சார்ந்த தரவுகளை உள்ளூர் அதிகார சபையில் உருவாக்குவதலானது நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தல், குடிமக்களிற்கு சிறந்த சேவைகளை வழங்குதல், உட்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புறத் திட்டமிடல், நிலைபேறான சுற்றுச்சூழல், அவசரகால முகாமைத்துவம் என்பவற்றிற்கு வினைத்திறனாகப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முதன்மை காரணியாக அமையும்.
அதனடிப்படையில் யாழ் பல்கலைக்கழக புவியியல் பீட இறுதியாண்டு மாணவர்களாகிய செல்வி சூ.சியாளினி, ரா.கவீதா சபையில் கடந்த 02 மாதகாலமாக உள்ளக பயிற்சியாளர்களாக செயற்பட்ட காலத்தில் வட்டார வரைபடத்தினை தயாரித்து வழங்கியமையிட்டு பெருமகிழ்ச்சியடைவதோடு, நல்லூர் பிரதேச சபையின் வட்டார வரைபட வழிகாட்டி அனைவருக்கும் ஒரு முக்கிய வளமாக அமையும்.