கொக்குவில் பொது நூலக தேசிய வாசிப்பு மாதம் – 2024 போட்டிகளுக்கான நேர அட்டவணை

28.09.2024 சனிக்கிழமை

1. 09.00 – 10.30 தரம் 6 பேச்சு

2. 10.30 – 12.00 தரம் 1 திருக்குறள் மனனம்

3. 02.00 – 03.00 தரம் 7 கட்டுரை

4. 02.00 – 03.00 தரம் 9 English Essay

5. 02.00 – 03.00 தரம் 10, 11 கட்டுரை

6. 02.00 – 03.00 தரம் 3 சொல்லுருவாக்கம்

29.09.2023 ஞாயிற்றுக்கிழமை

1. 09.00 – 10.00 முன்பள்ளி வர்ணம் தீட்டுதல்

2. 09.00 – 10.00 தரம் 4 விரைவு கணிதம

3. 10.30 – 12.00 தரம் 2 Puzzles பொருத்துதல்

4. 02.00 – 03.00 தரம் 5 பொது அறிவு

5. 02.00 – 03.00 தரம் 12-13 கவிதை

6. 02.00 – 03.00 தரம் 8 கிரகித்தல்

குறிப்பு :

வர்ணம் தீட்டுதல் போட்டியில் பங்குபற்றும் முன்பள்ளி மாணவர்கள் Color Chalk மற்றும் File கொண்டுவருதல் வேண்டும்.

கொக்குவில் பொது நூலகம் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகள் – 2024

தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் - 2024ஐ முன்னிட்டு நல்லூர் பிரதேச சபை கொக்குவில் பொது நூலகத்தினால் "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" என்னும் தொனிப்பொருளில் வாசகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கீழ்வரும் போட்டிகள் நடாத்தப்படவுள்ளது. ஆதலால் வாசகர்களும் மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

முன்பள்ளி மாணவர்கள் : வர்ணம் தீட்டல் (வழங்கப்படும் உருவத்திற்கு வர்ணம் தீட்டல்)

(இப்போட்டியில் 2025ம் ஆண்டு தரம் ஒன்றிற்குப் பிரவேசிக்கவுள்ள முன்பள்ளிச் சிறார்கள் மட்டும் பங்குபற்றலாம்)

தரம் 1 : திருக்குறள் மனனம்

விடயம் : அதிகாரம் - 1 "கடவுள் வாழ்த்து" 1 தொடக்கம் 5 வரையான குறள்கள்)

தரம் 2 : Puzzles பொருத்துதல்

விடயம் : வழங்கப்படும் படத்திற்கான பாகங்களை பொருத்துதல்.

தரம் 3 : சொல்லுருவாக்கம் (ஆங்கிலம்)

விடயம் : தரப்படும் ஆங்கில எழுத்துக்களை வைத்து சொற்களை உருவாக்கல்.

தரம் 4 : Speed Maths

வினாப்பத்திரம் தரப்படும்

தரம் 5 : பொது அறிவு

வினாத்தாள் வழங்கப்படும் (புலமைப்பரிசில் பரீட்சையை மாதிரியாகக் கொண்ட பொது அறிவு)

தரம் 6 : பேச்சு

விடயம் : "வாழ்வை வளமாக்கும் வாசிப்பு"

(03 நிமிடங்களிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தரம் 7 : கட்டுரை

விடயம் : "புத்தகத்தினுள் ஓர் உலகம்"

(150 சொல்லிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தரம் 8 : கிரகித்தல்

விடயம் : வழங்கப்படும் பந்தியை வாசித்து எம்மால் தரப்படும் வினாக்களுக்கு விடையளித்தல்

தரம் 9 : English Essay

விடயம் : "Books are Our Friends"

(100 சொல்லிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தரம் 10,11 : கட்டுரை

விடயம் : "உலகை வென்றவர்கள் வாசித்த மனிதர்களே"

(250 சொல்லிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)

தரம் 12,13 : கவிதை

விடயம் : "நான் ஒரு வாசகன்"

இரண்டு முதல் மூன்று பக்கங்களில் அமைதல் வேண்டும்

குறிப்பு :

*மேற்படி போட்டியில் பங்குபற்ற விரும்பவோர் எதிர்வரும் 15.09.2024 ஆம் திகதிக்கு முன்னர் கொக்குவில் பொது நூலகத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

*பாடசாலை மாணவர்கள் அதிபர் ஊடாக பெயர் விபரங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

*போட்டிகள் அனைத்தும் நூலக மண்டபத்தில் இடம்பெறும்.

*போட்டியில் வெற்றி பெறுவோரிற்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

*போட்டிகள் 28.09.2024, 29.09.2024 ஆகிய திகதிகளில் நடைபெறும். (நேர அட்டவணை அறிவிக்கப்படும்)

*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

சபைக்குச் சொந்தமான கடையினை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி கோரல்

சபைக்குச் சொந்தமான கீழ்காட்டப்பட்ட அட்டவணையில் விவரிக்கப்பட்ட கடையினை நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்வி கீழ்காட்டப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைவாக நல்லூர் பிரதேச சபையால் கோரப்படுகின்றது.
கேள்விப் பத்திரம் வழங்கும் திகதி :- 30.08.2024ம் திகதி தொடக்கம் 13.09.2024 திகதி மு.ப 10.00 மணிவரை
கேள்விப்பத்திரம் ஏற்றுக்கொள்ளும் திகதி :- 13.09.2024ம் திகதி பி.ப 12.00 மணிவரை
கேள்விப்பத்திரம் திறக்கப்படும் திகதி :- 13.09.2024ம் திகதி பி.ப 12.00 மணிக்கு
கேள்விப்பத்திரம் திறக்கப்படும் இடம் :- கலந்துரையாடல் மண்டபம், தலைமை அலுவலகம், நல்லூர் பிரதேச சபை
கேள்வி தொடர்பான நிபந்தனைகள், மேலதிக விபரங்களை அலுவலகத்தில் பார்வையிடலாம்.
செயலாளர்
நல்லூர் பிரதேச சபை
Tender notice

கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 4ம் வார நிகழ்வு

கொக்குவில் பொதுநூலகத்தினால் ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் யா/ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் 23.08.2024 அன்று பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்ற வாசிப்பு முகாமின் 4ம் வார நிகழ்வின் பதிவுகள்

சபையின் பதிவேடுகளில் ஆதன பெயர் மாற்றத்தின் அவசியம்

ATD impo

கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 3ம் வார நிகழ்வு

ஆரம்பப்பிரிவு மாணவா்களிடையே வாசிப்புப்பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் யாஃ கொக்குவில் ஸ்ரீ ராமகிருஸ்ண வித்தியாலயத்தில் 16.08.2024 அன்று பி.ப 2.00 மணியளவில் வாசிப்பு முகாமின் 3ம் வார நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் லண்டனிலிருந்து வருகைதந்த சமூக தன்னாா்வலா் திருமதி.சுகந்தி சந்திரமோகன் (தமிழா் சமூக நடுவம்) அவா்களும் வைத்திய கலாநிதி க.சிவசுதன் அவா்களும் கலந்து வாசிப்பை நோக்கிய பயணத்திற்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்கினா்.

2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள்

நல்லூர் பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் சம்பந்தமான முன்மொழிவுகள் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த முன்மொழிவுகளை கடிதம், மின்னஞ்சல், வலைத்தளம் மற்றும் நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும். எதிர்வரும் 2024.09.06ஆம் திகதிக்கு முன்னராக கிடைக்கப் பெறும் முன்மொழிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்வதற்கு சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

முகவரி : செயலாளார், நல்லூர் பிரதேச சபை, 14/5 கருவப்புலம் வீதி, கொக்குவில் கிழக்கு

மின்னஞ்சல் : npsnallur@gmail.com

வலைத்தளம்: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeKD0Zcy2Qffsb2_C6aUSrxcxeopRqjhrfb34Uwswn2sOrCCg/viewform


செயலாளர்

நல்லூர் பிரதேச சபை


Farm to Gate

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய FARM TO GATE செயலிக்கான மென்பொருள் வடிவமைப்பு செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு பங்குனி மாதம் FARM TO GATE செயலி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
FARM TO GATE ஊடாக விவசாயிகளிடமிருந்து, நுகர்வோர் நேரடியாக தங்களுக்கு தேவையான உற்பத்திகளை மொத்தமாகவோ அல்லது சில்லறை விலையிலோ கொள்வனவு செய்ய முடியும். இதனூடாக விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் மரக்கறிகள், பழங்கள் மற்றும் ஏனைய உற்பத்தி பொருட்களை காலவதியாகும் முன்னர் விற்பனை செய்துக்கொள்ள முடிவதுடன், நுகர்வோரும் தரமான, புதிய உற்பத்திகளை நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை FARM TO GATE ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
FARM TO GATE செயலியில் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களின் தரவுகள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், உற்பத்தி பொருட்களை இலகுவாக பெற்றுக்கொள்ளக்கூடிய இடம், உற்பத்திகளின் தரம், கையிருப்பிலுள்ள அளவு, விலை உள்ளிட்ட அனைத்து விடயங்களும் தரவேற்றம் செய்யா்பட்டுள்ளது.
• நீங்களாகவே தளத்தில் சுயமாகப் பதிவு செய்து கொள்ளலாம். அல்லது உங்கள் அருகிலுள்ள உள்ளூராட்சி அலுவலகத்தை தொடர்புகொண்டு "Farm to Gate" இல் உங்களைப் பதிவுசெய்யுமாறு விடய உத்தியோகத்தரைக் கோரலாம்.
• Farm to Gate என்பது ஒரு இலவச சமூக சந்தைப்படுத்தல் தளமாகும். எனவே, Farm to Gate சேவைகளைப் பதிவுசெய்து பெறுவதற்கு எந்தவிதமான கட்டணமும் அறவிடப்படுவதில்லை.
• ஏதேனும் சிக்கல்கள் அல்லது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு 0707213728 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் மாகாண திணைக்களத்தின் பொறுப்பான அதிகாரிகளை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். அல்லது npfarmtogate@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமும் தொடர்புகளை மேற்கொள்ளலாம்.
• ஒரு உள்ளூர் தயாரிப்பாளர் மாதத்திற்கு 100 இடுகைகள் அல்லது விளம்பரங்களைச் சமர்ப்பிக்கலாம்.


முன்பள்ளி மாணவர்களிற்கான விளையாட்டு உபகரணம்

உலக வங்கியின் நிதியீட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) Basic Tranche 04இல் LAPDPஇல் தெரிவு செய்யப்பட்ட உப கருத்திட்டத்தின் கீழ் சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களிற்கு பயனூட்டும் வகையில் 18 முன்பள்ளிகளுக்கு Round Swings வழங்கப்பட்டன.

முன்பள்ளி மாணவர்களுக்கான மேசைகள் மற்றும் கதிரைகள்

உலக வங்கியின் நிதியீட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) Basic Tranche 04இல் LAPDPஇல் தெரிவு செய்யப்பட்ட உப கருத்திட்டத்தின் கீழ் சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களிற்கு பயனூட்டும் வகையில் 19 முன்பள்ளிகளுக்கு மேசைகள் மற்றும் கதிரைகள் வழங்கப்பட்டன.

454662780_3885778125077902_4192731370804156888_n