நல்லூர் பிரதேச சபையின் வட்டார வரைபட வழிகாட்டி

புவியியல் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி  வரைபடங்களை இடம்சார்ந்த மற்றும் பண்பு சார்ந்த தரவுகளை உள்ளூர் அதிகார சபையில் உருவாக்குவதலானது நிர்வாகத்தின் செயல்திறனை மேம்படுத்தல், குடிமக்களிற்கு சிறந்த சேவைகளை வழங்குதல், உட்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புறத் திட்டமிடல், நிலைபேறான சுற்றுச்சூழல், அவசரகால முகாமைத்துவம் என்பவற்றிற்கு வினைத்திறனாகப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முதன்மை காரணியாக அமையும். 

அதனடிப்படையில் யாழ் பல்கலைக்கழக புவியியல் பீட இறுதியாண்டு மாணவர்களாகிய செல்வி சூ.சியாளினி, ரா.கவீதா சபையில் கடந்த 02 மாதகாலமாக உள்ளக பயிற்சியாளர்களாக செயற்பட்ட காலத்தில் வட்டார வரைபடத்தினை தயாரித்து வழங்கியமையிட்டு பெருமகிழ்ச்சியடைவதோடு, நல்லூர் பிரதேச சபையின் வட்டார வரைபட வழிகாட்டி அனைவருக்கும் ஒரு முக்கிய வளமாக அமையும்.

உலக வங்கியின் பிரதிநிதிகளின் 2024.07.18ம் திகதிய களவிஜயம்

சபையினால் ஐரோப்பிய நிதியீட்டத்தில் உள்ளுர் அபிவிருத்தி உதவித்திட்டத்தின் PT 02இல் மேற்கொள்ளப்பட்டு வரும் உப கருத்திட்டமான Balance Work of Shopping Complex at Kokuvilஇன் செயற்பாடுகளை உலக வங்கியின் பிரதிநிதிகள் 2024.07.18ம் திகதி களவிஜயம் மேற்கொண்டு வேலைகளை மேற்பார்வை செய்தனர்.
WhatsApp Image 2024-07-29 at 14.31.37_6136ab8c

தொழில் வாய்ப்பினை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிக்கான விண்ணப்பம்

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் பொருட்டு சபையினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் ஓர் பகுதியாக இவ்வாண்டும் சபையின் வருடாந்த வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் கீழ் சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்சார் வழிகாட்டல் பயிற்சிகளை வழங்க சபையினால் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இப்பயிற்சி நெறியில் கலந்து கொள்வதற்கு ஆர்வமுள்ள சபை எல்லைக்குள் வதியும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகள் சபையின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் 2024.08.09 திகதிக்கு முன்னர் கையளிக்க முடியும். கிடைக்கப்பெறும் விண்ணப்பங்களுக்கு அமைவாக பொருத்தமான பயிற்சி நெறிகள் தெரிவு செய்யப்படும்.

வாசிப்பு பழக்கத்தினை ஊக்குவித்தலும் நூலகங்களின் நூலக அங்கத்தவர்களை அதிகரித்தலும்

நூலளவு ஆகுமாம் நுண்ணறிவு” என்ற ஔவையாரின் வரிகள் இந்த உலகில் ஒரு மனிதன் எந்த அளவுக்கு நூல்களை வாசிக்கிறானோ, அந்த அளவுக்கு அவன் அறிவினை பெற்றுக்கொள்கிறான் என கூறுகின்றது. வாசிப்பு ஒரு மனிதனை பூரணப்படுத்துவதோடு, சிறந்த அறிவுத்திறனையும், நுண்ணறிவினையும் வழங்குகிறது.

ஒரு நல்ல நூல் ஒரு நல்ல நண்பனுக்கு ஒப்பானது. எனவே வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடனும் சபையினால் நூலக அங்கத்தவர்களை அதிகரிக்கும் நோக்கிலும் மக்களிற்கான நூலக அங்கத்துவம் தொடர்பில் பின்வரும் விதிமுறைகள் இலகுபடுத்தப்பபடுகின்றது.

  1. நூலக அங்கத்துவப் படிவத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். (https://www.nallur.ps.gov.lk/wp-content/uploads/2024/04/101.pdf எனும் லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்)
  2. நூலக அங்கத்துவக் கட்டணமின்றி அங்கத்துவம் பெற்றுக்கொள்ளலாம்
  3. பாடசாலை மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் பாடசாலை அதிபரின் கையொப்பத்துடன் விண்ணப்பங்களை வழங்கி நூலகத்தில் அங்கத்துவம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கமைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கேதுவாக தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது குடும்ப பதிவு அட்டையின் பிரதியை உறுதிப்படுத்தி நூலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  4. பாடசாலை மாணவர்கள் தவிர்ந்த ஏனையோருக்கு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தும் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது குடும்ப பதிவு அட்டையின் பிரதியை உறுதிப்படுத்தி நுலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

இதற்கமைய வாசிப்பு எப்போதும் மனிதனுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதனை உணர்ந்து, அனைவரையும் நூலகத்தில் இணைத்து வாசிப்பை ஊக்குவிக்க முயலுவோம்.

UNDPஇன் Resident Representative Azusa Kubotaஇன் விஜயம்

UNDPஇன் Resident Representative Azusa Kubota கடந்த 14ம் திகதி சபைக்கு விஜயம் செய்து சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்ட UNDP திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன் பின்னர் சபையின் வினைத்திறனான நவீன தொழிநுட்பத்துடனான சேவை வழங்கல் தொடர்பில் தனது ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளமை பெருமைக்குரியது.

 

இலத்திரனியல் முறையிலான வருமான அறவீடு

எமது சபையினால் நாளாந்தம் வருமான அறவீடுகள் மேற்கொள்ளப்படும் போது விரைவாகவும் பொதுமக்கள் இலகுவான முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளத்தக்கவாறு மாற்றியமைப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக வங்கி அட்டைக்கான பணப்பரிமாற்றம் மற்றும் QR முறை மூலமான பண பரிமாற்றம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் தமது கொடுப்பனவுகளை இலகுவான முறையில் மேற்கொள்ள முடிவதுடன், சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற நடமாடும் சேவை வழங்கலின் போதும் பொதுமக்களுக்கான சேவை வழங்கலை இலகுபடுத்த முடிகின்றது.


சபையினால் வழங்கப்படும் சேவைகளை குடிமக்களின் நலன்கருதி நிகழ்நிலை ஊடாகப்பெற்றுக்கொள்ள ஒழுங்குமுறைகள்

சபையினால் வழங்கப்படும் கீழ்வரும் சேவைகளை குடிமக்களின் நலன்கருதி நிகழ்நிலை ஊடாகப்பெற்றுக்கொள்ள ஒழுங்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
படிமுறைகள்
நிகழ்நிலை ஊடாக விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்தல்
நிகழ்நிலை ஊடாக கட்டணத்தை செலுத்துல் செலுத்துதல் https://www.nallur.ps.gov.lk/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4.../
மின்னஞ்சல் ஊடாக தங்களது முழு ஆவணங்களையும் சபையின் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைத்தல் - npsnallur@gmail.com
பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள்
வியாபார உரிமம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/149.pdf
சூழல் பாதுகாப்பு உரிமம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/151.pdf
மயானப்பாவனை விண்ணப்பம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/111.pdf
குடிநீர் வழங்கல் சேவை https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/108.pdf
ஆதன உரிமைமாற்றம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/144.pdf
கட்டணக் கழிவகற்றல் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/104.pdf
வழங்குநர் பதிவு https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/164.pdf