கொக்குவில் உப அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைக்கப்பட்டமை.

நீண்டகாலமாக போதிய பௌதீக வசதிகளற்ற நிலையில் கொக்குவில் உப அலுவலகம் இயங்கிவந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி பொருத்தமான வளங்களுடன் கொக்குவில் பகுதிக்கு மையமான குளப்பிட்டி சந்தியில் சபைக்கு சொந்தமான ஆதனத்தில் புதிய இரு தளங்களுடனான உப அலுவலகம் இவ்வாண்டில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கான சேவை வழங்கல் மிகவும் வினைத்திறனான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சபையின் எல்லைக்குள் வதியும் மற்றும் சபைக்கு சேவை பெறவரும் மாற்றுத்திறனுடைய குடிமக்கள் தமக்கான சேவை நிலையங்களிற்கு சமூகமளிக்கும் சந்தர்ப்பங்களில் எதுவித இடர்பாடுகளையும் எதிர்நோக்காது தமது சேவையினை இலகுவாக பெற்றுக் கொள்வதற்கு ஏதுவான முறையில் இவ்வலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை முன்னேற்றகரமானதோர் செயற்பாடாக அமைந்துள்ளது. இதன்மூலம் இவர்களுக்கு உளரீதியான தாக்கமின்றி சமூகத்தில் அவர்களும் சமாந்தரமான முறையில் சேவை பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


nso 2
nso 4
nso 8
nso 0

மின்விளக்கு பொருத்துதல்

சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாண்டில் மேலதிகமாக 141 மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வீதிகளில் இரவுநேரங்களில் பொதுமக்கள்  அச்சமின்றி நடமாடக்கூடியசூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இம்மின்குமிழ்களினை மின்கம்பங்களில் பொருத்துவதற்கான செலவாக ஒவ்வொரு மின்குமிழுக்கும் தலா 4இ422 ரூபாய் வீதம் சபையினால் இலங்கை மின்சாரசபைக்கு செலுத்தப்படுகின்றது. இதற்கென பாரியளவிலான சபைநிதி செலவிடப்படுகின்ற போதிலும், பொதுமக்களின் தேவையின் அவசியத்தினை கருத்தில் கொண்டு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்து.


b

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டி

நல்லூர் பிரதேசசபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டி 2023.10.28 சனி மற்றும் 2023.10.29 ஞாயிறு ஆகிய தினங்களில் திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. 15 சனசமூக நிலையங்கள் பங்குபற்றிய இச்சுற்றுப் போட்டிகளில் கொக்குவில் நேதாஜி ச.ச.நிலையம் சாம்பியனாகியது. இரண்டாம் இடத்தினை கொக்குவில் வராகி ச.ச நிலையம் பெற்றுக்கொண்டது. போட்டியின் போதான சில பதிவுகள்..

7
5

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான தாச்சிச் சுற்றுப் போட்டி

நல்லூர் பிரதேசசபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான தாச்சிச் சுற்றுப் போட்டி இன்றைய தினம் (2023.10.22 ஞாயிறு) கொக்குவில் பிடாரி அம்மன் சனசமூக நிலைய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். இச்சுற்றுப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் கோண்டாவில் ஸ்ரீநாராயணன் ச.ச.நிலைய மறுமலர்ச்சி வி.க சாம்பியனாகியது. பெண்கள் பிரிவில் அரியாலை பூம்புகார் ச.ச.நிலையம் சம்பியனாகியது.
அதன் சில பதிவுகள்
 

LDSP நிதியீட்டத்தில் BT4, PT 3 வேலைத்திட்டங்களிற்காக முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களை வெளிப்படுத்துவதற்கான கூட்டம்

2023/2024 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட இரண்டு கலந்துரையாடல்களின் அடிப்படையில் LDSP நிதியீட்டத்தில் BT4, PT 3 வேலைத்திட்டங்களிற்காக முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களை வெளிப்படுத்துவதற்கான கூட்டம் எதிர்வரும் 2023.10.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு பிரதேச சபை தலைமையலுவலகத்தில் இடம்பெறவுள்ளதால் ஆர்வமுடைய அனைத்து தரப்பினரையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். செயலாளர், நல்லூர் பிரதேச சபை

மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்டங்களின் கருத்தரங்குகள் தொடர்பான அறிவிப்பு

நல்லூர் பிரதேச சபையில் 2023/2024ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக 25.09.2023 மற்றும் 30.09.2023 ஆகிய இரு தினங்களிலும் பி.ப 2.00 மணியளவில் நல்லூர் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. இக்கருத்தரங்குகளில் பொதுமக்களையும், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள், விசேட தேவையுடையோர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் மேற்குறிப்பிட்ட இரு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் தவறாது கலந்து கொண்டு, பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
 
 

அபிவிருத்தி வேலைகளிற்கான ஒப்பந்த விபரங்கள்

நல்லூர் பிரதேச சபையினது இவ்வருடத்திற்கான அபிவிருத்தி வேலைகளும் அவற்றினை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களின் விபரங்களும் பொதுமக்களின் அறிதலுக்காக இங்கே காட்சிப்டுத்தப்படுகின்றது.
2023 Works Details
Serial Number Description of work Contractor Details Contract Amount
1 Renovation of Concrete Road - Kalviyankadu, Ariyalai Area - Package 02 - Adiyapatham Road 2 Annish Construction 644,000.00
2 Renovation of Concrete Road - Kalviyankadu, Ariyalai Area - Package 02 - Illayathambi By lane
3 Renovation of Macadam Road Ward - 01 - Karaikal Sivan Back Road New Generation Builders  
4 Renovation of Macadam Road Ward - 02- Kondavil Depot Back lane Annish Construction 3026500
5 Renovation of Macadam Road Ward - 03 - Serukapulam By Lane N.S Civil Construction 2,443,842.80
6 Renovation of Macadam Road Ward - 03 - Kulamkarai Veethy
7 Renovation of Macadam Road Ward - 05 - Appaiya Road Thiru Construction 1,125,059.04
8 Renovation of Macadam Road Ward - 06 - Old Post Office Road (Balance) New Generation Builders 2,772,310.60
9 Renovation of Macadam Road Ward - 07 - Amman Veethy By Lane (Right Side 1st Lane) Twin Builders 1,869,261.00
10 Renovation of Macadam Road Ward - 07 - Amman Veethy By Lane (Near Sylo Ice Cream)
11 Renovation of Macadam Road Ward - 08 - Kalasalai 5th Lane Sooriya Construction 1,866,658.07
12 Renovation of Macadam Road Ward - 08 - Kalasalai North Right side 1st Lane
13 Renovation of Macadam Road Ward - 09 - Adiyapatham left side 1st Lane Thiru Construction 2,548,402.15
14 Renovation of Macadam Road Ward - 09 - Palaly Road by lane
15 Renovation of Macadam Road Ward - 11 - Arasady Veethy 4th Lane Nation Builders 493,800.94
16 Renovation of Macadam Road Ward - 12 - Annaivelankanne Thodam Main Road Nation Construction 2,926,500.00
17 Improvements of Kokuvil Vegetable Market & Shop Bala & Son's Engineering 5,658,244.00
18 Construction of Granite Name Board Nation Builders 1,928,910.00
19 Construction of Nallur Pradesiya Sabha Kokuvil Sub Office at Kokuvil Shakthy Engineering 24,612,838.00
20 Improvements of Thirunelvely Market at Thirunelvely Stage I Baba Civil Engineering 1,807,616.00
21 Improvements of Thirunelvely Market at Thirunelvely Stage II Tharani Civil Engineering 1,245,321.80
22 Renovation of Macadam Roads Ward - 05 Nation Builders
143,630.18

நல்லூர் பிரதேச சபை கொக்குவில் உப அலுவலக கட்டிட நிர்மாணம்

நல்லூர் பிரதேச சபை கொக்குவில் உப அலுவலக புதிய கட்டிட நிர்மாண பணிகள் துரித கதியில் இடம்பெற்றுவருகின்றன. சபைநியில் ரூபா 28 மில்லியன் மதிப்பீட்டில் கேள்வி கோரப்பட்ட குறித்த வேலை சக்தி இஞ்சினியர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது முதவாவது மாடிக்கான தள அமைப்பு வேலைகள் இடம்பெற்றுவருகின்றது. கொக்குவில் சந்தை வளாகத்தில் குளப்பிட்டி வீதியை வாயில் முகப்பாக கொண்டு அமைக்கப்பட்டுவரும் குறித்த கட்டுமாண பணிகள் முடிவுற்றதும் விரைவில் கொக்குவில் உப அலுவலகத்தை புதிய கட்டிடத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

பால்நிலைப் பொறுப்புள்ள வரவுசெலவுத்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி

சபையின் 2024ம்ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட தயாரிப்பு தொடர்பான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ' பால்நிலை பொறுப்புள்ள வரவு செலவுத் திட்டம் (Gender Responsive Budgeting) என்னும் தலைப்பிலான தெளிவூட்டல் கருத்தரங்கு அண்மையில் சபையின் கலந்துரையாடல் மண்டபத்தில் இடம் பெற்றது. சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்;, சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் சமூக உறுப்பினர்கள் எவ்வாறு வரவு செலவு திட்ட தயாரிப்பு செய்முறையில் பங்களிக்க முடியும் என்பது தொடர்பிலும் செயற்திட்ட தெரிவில் பால்நிலை சார் செயற்திட்டங்கள் ஏன் அவசியம் என்பது தொடர்பிலும் மிகச்சிறந்த முறையில் வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகின் வளவாளரால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.   

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான நகரங்களை தூய்மையான அழகான நகரங்களாக மாற்றியமைக்கம் செயற்றிட்டம்.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான நகரங்களை தூய்மையான அழகான நகரங்களாக மாற்றியமைக்கம் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த 2023.08.21 ஆம் திகதி காலை 07.00 மணியளவில் நல்லூர் பிரதேச சபையின் திருநெல்வேலி சந்திப்பகுதியில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நல்லூர் பிரதேச சபையினது செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், திருநெல்வேலி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வில் நகரின் தூய்மையைப் பேணுவதற்கான கழிவகற்றல் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்காக கழிவுப்பொருட்களை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பிளாஸ்ரிக் தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் பிளாஸரிக் போத்தல்களை சேகரிப்பதற்கான விசேட கூடைகளும் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டன. அத்துடன் சபையினது சிற்றூழியர்களிற்கு SAVE A LIFE நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கிவைக்கப்பட்ட விசேட சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டுதல் செயற்பாடும் கௌரவ ஆளுநர் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் கழிவுப்பொருட்களைத் தரம்பிரித்தல் தொடர்பான வழிப்புணர்வு பதாதையும் திருநெல்வேலி சந்திப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது மேலும் சபையினால் அண்மையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிதிமூலம் கொள்வனவு செய்யப்பட்ட கழிவகற்றல் சேவைக்குரிய இரண்டு உழவு இயந்திரங்களும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டன. இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள், திருநெல்வேலி நகர வர்த்தகர்கள் இச்செயற்றிட்த்திற்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டதுடன் இன்று ஆரம்பிக்கும் இச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் நோக்கத்தினை அடைய சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.