வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் – 2024

சபையின் 2024ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் ஆர்வமுள்ள தரப்பினர் தமது கோரிக்கைகளை இலகு முறையில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகிள் படிவத்தில் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியுமென்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Link bellow

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeKD0Zcy2Qffsb2_C6aUSrxcxeopRqjhrfb34Uwswn2sOrCCg/viewform?usp=sf_link

==பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல் == 2024ம் ஆண்டுக்கான வருடாந்த வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள்

நல்லூர் பிரதேச சபையின் 2024ம் ஆண்டுக்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.

சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடிய வகையில் புத்தாக்க சிந்தையுடைய சுய பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பினை உருவாக்க கூடிய செயற்திட்டங்கள் மற்றும் கழிவகற்றல் தொடர்பில் வினைத்திறனான முன்மொழிவுகள் என்பவற்றின் மீது விசேட கவனம் ஈர்க்கப்படுகின்றது.

ஆர்வமுள்ள தரப்பினர் எதிர்வரும் 15.09.2023ம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது எமது சபையினது வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாவோ அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல் மற்றும் சபையின் இணையத் தளத்தினூடாகவோ முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்.

கிடைக்கப்பெறும் முன்மொழிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலதிக தகவல்களுக்கு : தொலை பேசி  021 222 2700
                                                   : வட்ஸ் அப்          070 222 2700

இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித்திட்டம். – 2023

பொதுமக்களிற்கான விசேட அறிவித்தல்
இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2023

‘ இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதன் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்து முகாமை செய்தல்’  என்னும் செயற்றிட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரத்தில் நல்லூர் பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கென சபையினால் பின்வரும் இடங்களில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் அகற்றப்படாமல் தேங்கியுள்ள இலத்திரனியல் கழிவுகளை கையளிக்க முடியும்.

2023.08.07  கொக்குவில் பொது நூலக அருகாமை
2023.08.08  கோண்டாவில் உப்புமடம் சந்தி 
2023.08.09  கோண்டாவில் பேருந்து சாலை முன்பாக
2023.08.10  கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் கோவில் அருகாமை
2023.08.11  பலாலி வீதி தபால்பெட்டி சந்தி அருகாமை
2023.08.12  அரியாலை உதயபுரம் சந்தி அருகாமை

இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களிற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைக்கவும்.
021 222 2700
070 222 2700

 

பொதுமக்களுக்கான அறிவித்தல் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு இணையத்தள நிதிப் பரிமாற்ற கட்டண முறைமையை நடைமுறைப்படுத்தல்

எமது சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற QR Scan திட்டத்தினூடாக தாங்கள் கட்டணங்கள்; செலுத்துவதற்கான சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் சபைக்கு நேரடியாக வருகை தராமல் தங்கள் கையடக்க தொலைபேசி மூலம் கொடுப்பனவு மேற்கொள்வதற்கான புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். குறித்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான செயன்முறைகள் பின்வருமாறு:
1. கட்டணம் செலுத்த வேண்டிய சேவைக்கான சரியான தொகையை அறிந்துகொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசியில் Smart Pay App இனை தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
3. அதற்கான தங்களது வங்கிக் கணக்கு தொடர்பான மேலதிக தகவல்களை குறித்த App  இல் உள்ளடக்கவும்.
4. ‘“QR Scan”’ எனும் தெரிவை தெரிவு செய்து எமது இணையத்தள முகப்பு பக்கத்தில் காணப்படுகின்ற QR Scan செய்து தங்களது கொடுப்பனவுத்தொகையை செலுத்த முடியும்.
5. செலுத்திய பின்னர் தங்களிற்குக் கிடைக்கப்பெறும் பற்றுச்சீட்டை தரவிறக்கம் செய்து பற்றுச்சீட்டையும், கட்டணம் செலுத்தப்பட்டமைக்கான நோக்கத்தினையயும் 070 222 2700 எனும் சபையின் Whats up இலக்கத்துக்கு அனுப்பிவைப்பதுடன், தங்களுக்கான சேவை விநியோக சேவையாக அமையுமிடத்து விநியோகக் கட்டணத்துடன் அச்சேவைகள் மேற்கொள்ளப்படும்.

உலக சுற்றாடல் தினம் 2023

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபையானது வேர்ள்ட் விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அரியாலை உதயபுரம் கடற்கரைப் பிரதேசத்தினை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நோக்குடன் சிரமதான நிகழ்வு ஒன்றினை கடந்த 2023.06.05 ஆம் திகதி நடாத்தியிருந்தது.

இந்நிகழ்வில் கடற்கரையோரத்தில் காணப்பட்ட பொலித்தீன்கள் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் இதர கழிவுகள் என்பன கேரிக்கபட்டு அகற்றப்பட்டன. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சமார் நூறு பேர் வரையில் கலந்துகொண்டு இச்சிரமதான நிகழ்வு சிறப்பாக இடம்பெற தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்

 

 

 

 

 

எமது சபையின் முறைப்பாடுகள் பற்றிய கைப்பேசிச் செயலி மற்றும் வருமான அறவீட்டு முகாமைத்துவ கணணி மென்பொருள் பயன்பாடு பற்றிய கலந்துரையாடல்.

எமது சபையின் முறைப்பாடுகள் பற்றிய கைப்பேசிச் செயலி மற்றும் வருமான அறவீட்டு முகாமைத்துவ கணணி மென்பொருள் பயன்பாடு பற்றிய கலந்துரையாடல் கடந்த 2023.06.02 ஆம் திகதி எமது அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நகரசபைகளின் கணக்காளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சித்திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் எமது சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த மென்பொருட்களின் பயன்பாடு மற்றும் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய சபைகளிற்கும் இம்மென்பொருட்களின் பாவனைனை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் உதவித்திட்டங்கள்

நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சபைநிதி மூலம் சபை எல்லைக்குள் வதியும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பங்களிற்கு தையல் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள்,தொழில்முயற்சிக்கான இயந்திர உபகரணங்கள், சமையற்பாத்திரங்கள், கோழிக்குஞ்சுகளுடன் கோழிக்கூடு என்பன வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2023.05.18ஆந் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிவைத்தார் அதனது பதிவுகள்..

நல்லூர் பிரதே சபையின் 2022 ஆண்டிற்கான செயற்பாட்டு அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை

நல்லூர் பிரதே சபையின் 2022 ஆண்டிற்கான செயற்பாட்டு அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை என்பன தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவற்றினை சபையினது தலைமை அலுவலகம், உப அலுவலகங்கள் மற்றும் சபையினது நூலகங்களில் பொதுமக்கள் பார்வையிடம்.

அவற்றினது சுருக்கம் கீழே காட்டப்பட்டுள்ளது.

 

 

2022 ஆம் வருடத்திற்கான இறுதிக் கணக்கறிக்கை

2022 ஆம் வருடத்திற்கான இறுதிக் கணக்கறிக்கை கடந்த 2023.02.21 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

குறித்த கணக்கு அறிக்கையின் சுருக்கமான விபரங்கள் வருமாறு,

நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 2022 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பொதுமக்களின் அறிதலுக்காக வரவுசெலவுத்திட்டத்தின் பொழிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.