உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான தாச்சிச் சுற்றுப் போட்டி

நல்லூர் பிரதேசசபையால் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சனசமூக நிலையங்களுக்கு இடையிலான தாச்சிச் சுற்றுப் போட்டி இன்றைய தினம் (2023.10.22 ஞாயிறு) கொக்குவில் பிடாரி அம்மன் சனசமூக நிலைய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. சபையின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய நிகழ்வினை யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்கள் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். இச்சுற்றுப் போட்டிகளின் ஆண்கள் பிரிவில் கோண்டாவில் ஸ்ரீநாராயணன் ச.ச.நிலைய மறுமலர்ச்சி வி.க சாம்பியனாகியது. பெண்கள் பிரிவில் அரியாலை பூம்புகார் ச.ச.நிலையம் சம்பியனாகியது.
அதன் சில பதிவுகள்
 

இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித்திட்டம். – 2023

பொதுமக்களிற்கான விசேட அறிவித்தல்
இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2023

' இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதன் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்து முகாமை செய்தல்'  என்னும் செயற்றிட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரத்தில் நல்லூர் பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கென சபையினால் பின்வரும் இடங்களில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் அகற்றப்படாமல் தேங்கியுள்ள இலத்திரனியல் கழிவுகளை கையளிக்க முடியும்.

2023.08.07  கொக்குவில் பொது நூலக அருகாமை 2023.08.08  கோண்டாவில் உப்புமடம் சந்தி  2023.08.09  கோண்டாவில் பேருந்து சாலை முன்பாக 2023.08.10  கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் கோவில் அருகாமை 2023.08.11  பலாலி வீதி தபால்பெட்டி சந்தி அருகாமை 2023.08.12  அரியாலை உதயபுரம் சந்தி அருகாமை
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களிற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைக்கவும். 021 222 2700 070 222 2700  

நாட்டின் பொருளாதார மந்த நிலையை கருத்திற்கொண்டு எமது சபை எல்லைக்குள் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி எமது சபையினால் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் தெரிவித்தார்.

இன்றையதினம் எமது சபையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பொதுமக்களை உணவுப் பஞ்சத்தில் இருந்து பாதுகாக்கவும் வறுமை நிலையிலிருந்து தணிப்பதற்கும் பிரதேச சபையின் நிதிப் பங்களிப்புடன் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இரண்டு வேலைத் திட்டங்களும் மேற்கொள்ளப்படவுள்ளது. எமது சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கமைய குறுங்கால வீட்டுத் தோட்டப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகத்தின் ஊடாக பெறப்படும் பயனாளிகளுக்கு விதைகள் நாற்றுகள் இயற்கைப் பசளை வழங்கப்பட்டு அதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும் சனசமூக நிலையங்களை தயார்ப்படுத்தி உணவுப் பஞ்சம் பற்றாக்குறையில் இருக்கும் குடும்பங்களுக்கு உடனடியாக உணவுப் பொதிகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காணி வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வீட்டுத் தோட்டங்களை உருவாக்கி மேம்படுத்தவேண்டும். அவர்களுக்கு எந்த உதவிகளையும் நல்லூர் பிரதேச சபை மேற் கொள்வதற்கு தயாராக உள்ளது. எம்முடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் தயாராக உள்ளன என்றார்.