நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான “அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்தல்” என்ற இலக்கை அடையும் நோக்கில் சபை ஆளுகையினுள் வதியும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பிரதேச செயலரின் சிபார்சிற்கமைய வறுமைக்கோட்பட்ட 60 கர்ப்பிணித் தாய்மார்களிற்கு ரூபா 621,626.40 பெறுமதியான தாய் சேய் நல பிரசவப்பொருட்கள் அடங்கிய பொதிகள் சபை நிதியிலிருந்து வழங்கப்பட்டன. குறித்த பொதிகளை கர்ப்பிணித்தாய்மார்கள் சிரமமின்றி இலகுவில் பெற்றுக்கொள்ளக்கூடியவகையில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் எமது சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை உத்தியோகத்தர்களினால் கர்ப்பிணித் தாய்மார்களிற்கு வழங்கிவைக்கப்பட்டது.
Category: நிழற்படங்கள்
பாராளுமன்றத் தேர்தல் 2024
எதிர்வரும் 14ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கும் முறைமை தொடர்பில் யாழ்ப்பாணம் தேர்தல்கள் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட விழிப்புணர்வூட்டும் காணொளி இதுவாகும். பொதுமக்களின் உரிமையும் கடமையுமான வாக்களித்தலை சரியான முறையில் மேற்கொள்வதற்கு இக்காணொளி உறுதுணையாக அமையும்.
காணொளியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும் - https://www.facebook.com/61556532111908/videos/1309923283370589
தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு
”உலகை வென்றவா்கள் வாசித்த மக்களே“ எனும் தொனிப்பொருளிற்கு அமைய நல்லூா் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற கொக்குவில், கோண்டாவில், நல்லூா் நூலகங்களின் 2024ம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாத ஆக்கத்திறன் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு 20.10.2024 அன்று இனிதே இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுணா் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி சி.சிவதாஸ் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபா் திரு.பெ.வசந்தன் ஆகியோரிற்கு எமது மனமாா்ந்த நன்றிகள். மற்றும் பரிசில்களைப் பெற்ற மாணவா்களிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு, வரவேற்பு நடனத்தை வழங்கிய யா.கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாலய மாணவிகளிற்கும் பட்டிமன்றத்தை வழங்கிய திரு.எஸ்பீரியா் ஜனாா்த் குழுவினரிற்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 6ம் வார நிகழ்வு
தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 2ம் நாள்
தேசிய வாசிப்பு மாதம் – 2024 ஆக்கத்திறன் போட்டியின் 1ம் நாள்
சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளிற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஒன்றான ”அனைவரும் உள்ளடங்கிய சமத்துவமான கல்வியையும் வாழ்நாளுக்கான கற்றல் சந்தர்ப்பத்தினையும் உறுதி செய்தல்” என்பதனை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கியின் நிதியீட்டத்தில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் (LDSP) Basic Tranche 04இல் LAPDPஇல் தெரிவு செய்யப்பட்ட உப கருத்திட்டத்தில் சனசமூக நிலையங்களிற்கு கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் கல்வி கற்கும் முன்பள்ளி சிறார்களிற்கு பயனூட்டும் வகையில் 18 முன்பள்ளிகளுக்கு ரூபா 1,575,180.00 பெறுமதியான விளையாட்டுப்போட்டிகளிற்கான Band Sets வழங்கப்பட்டன.
கொக்குவில் பொது நூலகத்தின் வாசிப்பு முகாமின் 5ம் வார நிகழ்வு
கொக்குவில் பொது நூலக தேசிய வாசிப்பு மாதம் – 2024 போட்டிகளுக்கான நேர அட்டவணை
28.09.2024 சனிக்கிழமை
1. 09.00 – 10.30 தரம் 6 பேச்சு
2. 10.30 – 12.00 தரம் 1 திருக்குறள் மனனம்
3. 02.00 – 03.00 தரம் 7 கட்டுரை
4. 02.00 – 03.00 தரம் 9 English Essay
5. 02.00 – 03.00 தரம் 10, 11 கட்டுரை
6. 02.00 – 03.00 தரம் 3 சொல்லுருவாக்கம்
29.09.2023 ஞாயிற்றுக்கிழமை
1. 09.00 – 10.00 முன்பள்ளி வர்ணம் தீட்டுதல்
2. 09.00 – 10.00 தரம் 4 விரைவு கணிதம
3. 10.30 – 12.00 தரம் 2 Puzzles பொருத்துதல்
4. 02.00 – 03.00 தரம் 5 பொது அறிவு
5. 02.00 – 03.00 தரம் 12-13 கவிதை
6. 02.00 – 03.00 தரம் 8 கிரகித்தல்
குறிப்பு :
வர்ணம் தீட்டுதல் போட்டியில் பங்குபற்றும் முன்பள்ளி மாணவர்கள் Color Chalk மற்றும் File கொண்டுவருதல் வேண்டும்.
கொக்குவில் பொது நூலகம் தேசிய வாசிப்புமாத நிகழ்வுகள் – 2024
தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் - 2024ஐ முன்னிட்டு நல்லூர் பிரதேச சபை கொக்குவில் பொது நூலகத்தினால் "உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே" என்னும் தொனிப்பொருளில் வாசகர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் கீழ்வரும் போட்டிகள் நடாத்தப்படவுள்ளது. ஆதலால் வாசகர்களும் மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
முன்பள்ளி மாணவர்கள் : வர்ணம் தீட்டல் (வழங்கப்படும் உருவத்திற்கு வர்ணம் தீட்டல்)
(இப்போட்டியில் 2025ம் ஆண்டு தரம் ஒன்றிற்குப் பிரவேசிக்கவுள்ள முன்பள்ளிச் சிறார்கள் மட்டும் பங்குபற்றலாம்)
தரம் 1 : திருக்குறள் மனனம்
விடயம் : அதிகாரம் - 1 "கடவுள் வாழ்த்து" 1 தொடக்கம் 5 வரையான குறள்கள்)
தரம் 2 : Puzzles பொருத்துதல்
விடயம் : வழங்கப்படும் படத்திற்கான பாகங்களை பொருத்துதல்.
தரம் 3 : சொல்லுருவாக்கம் (ஆங்கிலம்)
விடயம் : தரப்படும் ஆங்கில எழுத்துக்களை வைத்து சொற்களை உருவாக்கல்.
தரம் 4 : Speed Maths
வினாப்பத்திரம் தரப்படும்
தரம் 5 : பொது அறிவு
வினாத்தாள் வழங்கப்படும் (புலமைப்பரிசில் பரீட்சையை மாதிரியாகக் கொண்ட பொது அறிவு)
தரம் 6 : பேச்சு
விடயம் : "வாழ்வை வளமாக்கும் வாசிப்பு"
(03 நிமிடங்களிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)
தரம் 7 : கட்டுரை
விடயம் : "புத்தகத்தினுள் ஓர் உலகம்"
(150 சொல்லிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)
தரம் 8 : கிரகித்தல்
விடயம் : வழங்கப்படும் பந்தியை வாசித்து எம்மால் தரப்படும் வினாக்களுக்கு விடையளித்தல்
தரம் 9 : English Essay
விடயம் : "Books are Our Friends"
(100 சொல்லிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)
தரம் 10,11 : கட்டுரை
விடயம் : "உலகை வென்றவர்கள் வாசித்த மனிதர்களே"
(250 சொல்லிற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்)
தரம் 12,13 : கவிதை
விடயம் : "நான் ஒரு வாசகன்"
இரண்டு முதல் மூன்று பக்கங்களில் அமைதல் வேண்டும்
குறிப்பு :
*மேற்படி போட்டியில் பங்குபற்ற விரும்பவோர் எதிர்வரும் 15.09.2024 ஆம் திகதிக்கு முன்னர் கொக்குவில் பொது நூலகத்தில் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
*பாடசாலை மாணவர்கள் அதிபர் ஊடாக பெயர் விபரங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
*போட்டிகள் அனைத்தும் நூலக மண்டபத்தில் இடம்பெறும்.
*போட்டியில் வெற்றி பெறுவோரிற்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
*போட்டிகள் 28.09.2024, 29.09.2024 ஆகிய திகதிகளில் நடைபெறும். (நேர அட்டவணை அறிவிக்கப்படும்)
*நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.