2023/2024 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக நடாத்தப்பட்ட இரண்டு கலந்துரையாடல்களின் அடிப்படையில் LDSP நிதியீட்டத்தில் BT4, PT 3 வேலைத்திட்டங்களிற்காக முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்களை வெளிப்படுத்துவதற்கான கூட்டம் எதிர்வரும் 2023.10.06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு பிரதேச சபை தலைமையலுவலகத்தில் இடம்பெறவுள்ளதால் ஆர்வமுடைய அனைத்து தரப்பினரையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
செயலாளர்,
நல்லூர் பிரதேச சபை
Category: நிழற்படங்கள்
மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்தித் திட்டங்களின் கருத்தரங்குகள் தொடர்பான அறிவிப்பு
நல்லூர் பிரதேச சபையில் 2023/2024ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக 25.09.2023 மற்றும் 30.09.2023 ஆகிய இரு தினங்களிலும் பி.ப 2.00 மணியளவில் நல்லூர் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன.
இக்கருத்தரங்குகளில் பொதுமக்களையும், பொது அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், விளையாட்டுக்கழகங்கள், விசேட தேவையுடையோர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் மற்றும் இளைஞர் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் மேற்குறிப்பிட்ட இரு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தில் தவறாது கலந்து கொண்டு, பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான கருத்துக்களை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அபிவிருத்தி வேலைகளிற்கான ஒப்பந்த விபரங்கள்
நல்லூர் பிரதேச சபையினது இவ்வருடத்திற்கான அபிவிருத்தி வேலைகளும் அவற்றினை மேற்கொண்டுவரும் ஒப்பந்தகாரர்களின் விபரங்களும் பொதுமக்களின் அறிதலுக்காக இங்கே காட்சிப்டுத்தப்படுகின்றது.
2023 Works Details | |||
Serial Number | Description of work | Contractor Details | Contract Amount |
1 | Renovation of Concrete Road - Kalviyankadu, Ariyalai Area - Package 02 - Adiyapatham Road 2 | Annish Construction | 644,000.00 |
2 | Renovation of Concrete Road - Kalviyankadu, Ariyalai Area - Package 02 - Illayathambi By lane | ||
3 | Renovation of Macadam Road Ward - 01 - Karaikal Sivan Back Road | New Generation Builders | |
4 | Renovation of Macadam Road Ward - 02- Kondavil Depot Back lane | Annish Construction | 3026500 |
5 | Renovation of Macadam Road Ward - 03 - Serukapulam By Lane | N.S Civil Construction | 2,443,842.80 |
6 | Renovation of Macadam Road Ward - 03 - Kulamkarai Veethy | ||
7 | Renovation of Macadam Road Ward - 05 - Appaiya Road | Thiru Construction | 1,125,059.04 |
8 | Renovation of Macadam Road Ward - 06 - Old Post Office Road (Balance) | New Generation Builders | 2,772,310.60 |
9 | Renovation of Macadam Road Ward - 07 - Amman Veethy By Lane (Right Side 1st Lane) | Twin Builders | 1,869,261.00 |
10 | Renovation of Macadam Road Ward - 07 - Amman Veethy By Lane (Near Sylo Ice Cream) | ||
11 | Renovation of Macadam Road Ward - 08 - Kalasalai 5th Lane | Sooriya Construction | 1,866,658.07 |
12 | Renovation of Macadam Road Ward - 08 - Kalasalai North Right side 1st Lane | ||
13 | Renovation of Macadam Road Ward - 09 - Adiyapatham left side 1st Lane | Thiru Construction | 2,548,402.15 |
14 | Renovation of Macadam Road Ward - 09 - Palaly Road by lane | ||
15 | Renovation of Macadam Road Ward - 11 - Arasady Veethy 4th Lane | Nation Builders | 493,800.94 |
16 | Renovation of Macadam Road Ward - 12 - Annaivelankanne Thodam Main Road | Nation Construction | 2,926,500.00 |
17 | Improvements of Kokuvil Vegetable Market & Shop | Bala & Son's Engineering | 5,658,244.00 |
18 | Construction of Granite Name Board | Nation Builders | 1,928,910.00 |
19 | Construction of Nallur Pradesiya Sabha Kokuvil Sub Office at Kokuvil | Shakthy Engineering | 24,612,838.00 |
20 | Improvements of Thirunelvely Market at Thirunelvely Stage I | Baba Civil Engineering | 1,807,616.00 |
21 | Improvements of Thirunelvely Market at Thirunelvely Stage II | Tharani Civil Engineering | 1,245,321.80 |
22 | Renovation of Macadam Roads Ward - 05 | Nation Builders |
143,630.18 |
நல்லூர் பிரதேச சபை கொக்குவில் உப அலுவலக கட்டிட நிர்மாணம்
நல்லூர் பிரதேச சபை கொக்குவில் உப அலுவலக புதிய கட்டிட நிர்மாண பணிகள் துரித கதியில் இடம்பெற்றுவருகின்றன. சபைநியில் ரூபா 28 மில்லியன் மதிப்பீட்டில் கேள்வி கோரப்பட்ட குறித்த வேலை சக்தி இஞ்சினியர்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது முதவாவது மாடிக்கான தள அமைப்பு வேலைகள் இடம்பெற்றுவருகின்றது.
கொக்குவில் சந்தை வளாகத்தில் குளப்பிட்டி வீதியை வாயில் முகப்பாக கொண்டு அமைக்கப்பட்டுவரும் குறித்த கட்டுமாண பணிகள் முடிவுற்றதும் விரைவில் கொக்குவில் உப அலுவலகத்தை புதிய கட்டிடத்தில் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.







பால்நிலைப் பொறுப்புள்ள வரவுசெலவுத்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி
சபையின் 2024ம்ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட தயாரிப்பு தொடர்பான செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக ' பால்நிலை பொறுப்புள்ள வரவு செலவுத் திட்டம் (Gender Responsive Budgeting) என்னும் தலைப்பிலான தெளிவூட்டல் கருத்தரங்கு அண்மையில் சபையின் கலந்துரையாடல் மண்டபத்தில் இடம் பெற்றது.
சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்;, சபை உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் சமூக உறுப்பினர்கள் எவ்வாறு வரவு செலவு திட்ட தயாரிப்பு செய்முறையில் பங்களிக்க முடியும் என்பது தொடர்பிலும் செயற்திட்ட தெரிவில் பால்நிலை சார் செயற்திட்டங்கள் ஏன் அவசியம் என்பது தொடர்பிலும் மிகச்சிறந்த முறையில் வடமாகாண முகாமைத்துவ பயிற்சி அலகின் வளவாளரால் தெளிவூட்டல் வழங்கப்பட்டது.




உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான நகரங்களை தூய்மையான அழகான நகரங்களாக மாற்றியமைக்கம் செயற்றிட்டம்.
வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதான நகரங்களை தூய்மையான அழகான நகரங்களாக மாற்றியமைக்கம் செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு கடந்த 2023.08.21 ஆம் திகதி காலை 07.00 மணியளவில் நல்லூர் பிரதேச சபையின் திருநெல்வேலி சந்திப்பகுதியில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நல்லூர் பிரதேச சபையினது செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், திருநெல்வேலி நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் நகரின் தூய்மையைப் பேணுவதற்கான கழிவகற்றல் செயற்பாட்டினை மேம்படுத்துவதற்காக கழிவுப்பொருட்களை தரம்பிரித்து சேகரிப்பதற்கான பிளாஸ்ரிக் தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன. அத்துடன் பிளாஸரிக் போத்தல்களை சேகரிப்பதற்கான விசேட கூடைகளும் அறிமுகப்படுத்திவைக்கப்பட்டன. அத்துடன் சபையினது சிற்றூழியர்களிற்கு SAVE A LIFE நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கிவைக்கப்பட்ட விசேட சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடும் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழிப்புணர்வு ஸ்ரிக்கர் ஒட்டுதல் செயற்பாடும் கௌரவ ஆளுநர் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் கழிவுப்பொருட்களைத் தரம்பிரித்தல் தொடர்பான வழிப்புணர்வு பதாதையும் திருநெல்வேலி சந்திப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது
மேலும் சபையினால் அண்மையில் உள்ளூர் அபிவிருத்தி உதவித்திட்ட நிதிமூலம் கொள்வனவு செய்யப்பட்ட கழிவகற்றல் சேவைக்குரிய இரண்டு உழவு இயந்திரங்களும் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் கௌரவ ஆளுநர் அவர்கள், திருநெல்வேலி நகர வர்த்தகர்கள் இச்செயற்றிட்த்திற்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டதுடன் இன்று ஆரம்பிக்கும் இச்செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் நோக்கத்தினை அடைய சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் ஆலோசனைகளை வழங்கினார்.











வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் – 2024
சபையின் 2024ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் ஆர்வமுள்ள தரப்பினர் தமது கோரிக்கைகளை இலகு முறையில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகிள் படிவத்தில் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியுமென்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Link bellow
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeKD0Zcy2Qffsb2_C6aUSrxcxeopRqjhrfb34Uwswn2sOrCCg/viewform?usp=sf_link
==பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல் == 2024ம் ஆண்டுக்கான வருடாந்த வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள்
நல்லூர் பிரதேச சபையின் 2024ம் ஆண்டுக்கான வருடாந்த வரவு செலவுத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.
சபையினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்தி இலக்குகளை அடையக்கூடிய வகையில் புத்தாக்க சிந்தையுடைய சுய பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பினை உருவாக்க கூடிய செயற்திட்டங்கள் மற்றும் கழிவகற்றல் தொடர்பில் வினைத்திறனான முன்மொழிவுகள் என்பவற்றின் மீது விசேட கவனம் ஈர்க்கப்படுகின்றது.
ஆர்வமுள்ள தரப்பினர் எதிர்வரும் 15.09.2023ம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது எமது சபையினது வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாவோ அல்லது கடிதம், தொலைபேசி, மின்னஞ்சல், முகநூல் மற்றும் சபையின் இணையத் தளத்தினூடாகவோ முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும்.
கிடைக்கப்பெறும் முன்மொழிவுகளில் பொருத்தமான முன்மொழிவுகள் முன்னுரிமை அடிப்படையில் உள்வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு : தொலை பேசி 021 222 2700
: வட்ஸ் அப் 070 222 2700
இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித்திட்டம். – 2023
பொதுமக்களிற்கான விசேட அறிவித்தல் இலத்திரனியல் கழிவு சேகரிப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2023
' இலத்திரனியல் கழிவுகளை முறையாக சேகரித்து அகற்றுவதன் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்து முகாமை செய்தல்' என்னும் செயற்றிட்டத்தின் கீழ் மத்திய சுற்றாடல் அபிவிருத்தி அதிகார சபையால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலத்திரனியல் கழிவு சேகரிப்பு வாரத்தில் நல்லூர் பிரதேச சபையினால் இலத்திரனியல் கழிவுகள் சேகரிக்கும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கென சபையினால் பின்வரும் இடங்களில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள சேகரிப்பு மையங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் போன்ற இடங்களில் அகற்றப்படாமல் தேங்கியுள்ள இலத்திரனியல் கழிவுகளை கையளிக்க முடியும்.
2023.08.07 கொக்குவில் பொது நூலக அருகாமை 2023.08.08 கோண்டாவில் உப்புமடம் சந்தி 2023.08.09 கோண்டாவில் பேருந்து சாலை முன்பாக 2023.08.10 கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் கோவில் அருகாமை 2023.08.11 பலாலி வீதி தபால்பெட்டி சந்தி அருகாமை 2023.08.12 அரியாலை உதயபுரம் சந்தி அருகாமை
இவ்விடயம் தொடர்பான மேலதிக தகவல்களிற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களிற்கு அழைக்கவும். 021 222 2700 070 222 2700





பொதுமக்களுக்கான அறிவித்தல் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு இணையத்தள நிதிப் பரிமாற்ற கட்டண முறைமையை நடைமுறைப்படுத்தல்
எமது சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற QR Scan திட்டத்தினூடாக தாங்கள் கட்டணங்கள்; செலுத்துவதற்கான சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் சபைக்கு நேரடியாக வருகை தராமல் தங்கள் கையடக்க தொலைபேசி மூலம் கொடுப்பனவு மேற்கொள்வதற்கான புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். குறித்த சேவையைப் பெற்றுக்கொள்வதற்கான செயன்முறைகள் பின்வருமாறு:
1. கட்டணம் செலுத்த வேண்டிய சேவைக்கான சரியான தொகையை அறிந்துகொள்ளவும்.
2. கையடக்க தொலைபேசியில் Smart Pay App இனை தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
3. அதற்கான தங்களது வங்கிக் கணக்கு தொடர்பான மேலதிக தகவல்களை குறித்த App இல் உள்ளடக்கவும்.
4. '“QR Scan”' எனும் தெரிவை தெரிவு செய்து எமது இணையத்தள முகப்பு பக்கத்தில் காணப்படுகின்ற QR Scan செய்து தங்களது கொடுப்பனவுத்தொகையை செலுத்த முடியும்.
5. செலுத்திய பின்னர் தங்களிற்குக் கிடைக்கப்பெறும் பற்றுச்சீட்டை தரவிறக்கம் செய்து பற்றுச்சீட்டையும், கட்டணம் செலுத்தப்பட்டமைக்கான நோக்கத்தினையயும் 070 222 2700 எனும் சபையின் Whats up இலக்கத்துக்கு அனுப்பிவைப்பதுடன், தங்களுக்கான சேவை விநியோக சேவையாக அமையுமிடத்து விநியோகக் கட்டணத்துடன் அச்சேவைகள் மேற்கொள்ளப்படும்.
