உலக சுற்றாடல் தினம் 2023

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபையானது வேர்ள்ட் விசன் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அரியாலை உதயபுரம் கடற்கரைப் பிரதேசத்தினை சுத்தப்படுத்தி அழகுபடுத்தும் நோக்குடன் சிரமதான நிகழ்வு ஒன்றினை கடந்த 2023.06.05 ஆம் திகதி நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் கடற்கரையோரத்தில் காணப்பட்ட பொலித்தீன்கள் பிளாஸ்ரிக் போத்தல்கள் மற்றும் இதர கழிவுகள் என்பன கேரிக்கபட்டு அகற்றப்பட்டன. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சமார் நூறு பேர் வரையில் கலந்துகொண்டு இச்சிரமதான நிகழ்வு சிறப்பாக இடம்பெற தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்          

எமது சபையின் முறைப்பாடுகள் பற்றிய கைப்பேசிச் செயலி மற்றும் வருமான அறவீட்டு முகாமைத்துவ கணணி மென்பொருள் பயன்பாடு பற்றிய கலந்துரையாடல்.

எமது சபையின் முறைப்பாடுகள் பற்றிய கைப்பேசிச் செயலி மற்றும் வருமான அறவீட்டு முகாமைத்துவ கணணி மென்பொருள் பயன்பாடு பற்றிய கலந்துரையாடல் கடந்த 2023.06.02 ஆம் திகதி எமது அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நகரசபைகளின் கணக்காளர்கள், வடக்கு மாகாண உள்ளூராட்சித்திணைக்கள உதவி ஆணையாளர் மற்றும் எமது சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது குறித்த மென்பொருட்களின் பயன்பாடு மற்றும் எதிர்கொள்கின்ற சவால்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்திலுள்ள ஏனைய சபைகளிற்கும் இம்மென்பொருட்களின் பாவனைனை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் உதவித்திட்டங்கள்

நிலைபேண்தகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு சபைநிதி மூலம் சபை எல்லைக்குள் வதியும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் குடும்பங்களிற்கு தையல் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள்,தொழில்முயற்சிக்கான இயந்திர உபகரணங்கள், சமையற்பாத்திரங்கள், கோழிக்குஞ்சுகளுடன் கோழிக்கூடு என்பன வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 2023.05.18ஆந் திகதி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கிவைத்தார் அதனது பதிவுகள்..

சபையினால் வழங்கப்படும் சேவைகளை குடிமக்களின் நலன்கருதி நிகழ்நிலை ஊடாகப்பெற்றுக்கொள்ள ஒழுங்குமுறைகள்

சபையினால் வழங்கப்படும் கீழ்வரும் சேவைகளை குடிமக்களின் நலன்கருதி நிகழ்நிலை ஊடாகப்பெற்றுக்கொள்ள ஒழுங்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
படிமுறைகள்
நிகழ்நிலை ஊடாக விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்தல்
நிகழ்நிலை ஊடாக கட்டணத்தை செலுத்துல் செலுத்துதல் https://www.nallur.ps.gov.lk/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a4.../
மின்னஞ்சல் ஊடாக தங்களது முழு ஆவணங்களையும் சபையின் மின்னஞ்சலிற்கு அனுப்பி வைத்தல் - npsnallur@gmail.com
பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள்
வியாபார உரிமம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/149.pdf
சூழல் பாதுகாப்பு உரிமம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/151.pdf
மயானப்பாவனை விண்ணப்பம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/111.pdf
குடிநீர் வழங்கல் சேவை https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/108.pdf
ஆதன உரிமைமாற்றம் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/144.pdf
கட்டணக் கழிவகற்றல் https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/104.pdf
வழங்குநர் பதிவு https://www.nallur.ps.gov.lk/wp.../uploads/2024/07/164.pdf

நல்லூர் பிரதே சபையின் 2022 ஆண்டிற்கான செயற்பாட்டு அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை

நல்லூர் பிரதே சபையின் 2022 ஆண்டிற்கான செயற்பாட்டு அறிக்கை மற்றும் நிர்வாக அறிக்கை என்பன தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவற்றினை சபையினது தலைமை அலுவலகம், உப அலுவலகங்கள் மற்றும் சபையினது நூலகங்களில் பொதுமக்கள் பார்வையிடம். அவற்றினது சுருக்கம் கீழே காட்டப்பட்டுள்ளது.    

2022 ஆம் வருடத்திற்கான இறுதிக் கணக்கறிக்கை

2022 ஆம் வருடத்திற்கான இறுதிக் கணக்கறிக்கை கடந்த 2023.02.21 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறித்த கணக்கு அறிக்கையின் சுருக்கமான விபரங்கள் வருமாறு,

நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

நல்லூர் பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் கடந்த 2022 நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் அறிதலுக்காக வரவுசெலவுத்திட்டத்தின் பொழிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

CDLG திட்டத்தின் கீழ் விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைப்பு

#CDLG திட்டத்தினூடாக undp நிறுவனத்தால் நல்லூர் பிரதேச சபையின் கெளரவ பெண் உறுப்பினர்களின் முன்மொழிவிற்கமைய கிடைத்த நிதி மூலமாக வீட்டுதோட்ட விவசாயத்தில் ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு , விவசாய உள்ளீடுகள், நாற்றுகள், விதைகள், மற்றும் அதனோடிணைந்த பொருட்கள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் – 2023

சபையின் 2023ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் ஆர்வமுள்ள தரப்பினர் தமது கோரிக்கைகளை இலகு முறையில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகிள் படிவத்தில் தங்கள் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியுமென்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். https://docs.google.com/forms/d/1WSf0E53fUWSTH6AIUlt36kS4uNgJihJ-_yeF4UrjYT8/edit