LDSP திட்டத்தில்(உள்ளூர் அபிவிருத்தி ஆதரவு திட்டம்) செயற்பாட்டு பரிமாற்ற நிதி ஒதுக்கீட்டில் , கைத்தொழில் அபிவிருத்திசபையுடன் இணைந்து தையல்,கணணிமற்றும் தோல்பயிற்சிநெறியில் பங்குபற்றியோருக்கான சான்றிதழ் வழங்கல் மற்றும் வாழ்வாதார உதவிக்கான(ஆடுவளர்ப்பு) புலமைப்பரிசில் , பல்கலைக்கழகவனுமதி பெற்றமாணவர்களுக்கான காசோலை வழங்கல் நிகழ்வின் பதிவுகள்

நல்லூர் பிரதேசசபை துடுப்பாட்ட அணியினருக்கு புதிய கோலவுடை வழங்கிவைக்கப்பட்டது பொது தனியார் பங்களிப்பு எண்ணக்கருவின் கீழ் ஊழியர் நலன்புரிசங்கமூடாக நிதி பங்களிப்பு செய்த S.K. ரவி(கனடா) ,லக்ஷ்மி திருமணமண்டபம்,M.M.C மற்றும் A.R.C கட்டடநிர்மானிகளுக்கு நன்றிகள்

நல்லூர் பிரதேசசபையின் ஏற்பாட்டில் பலாலி வீதி திருநெல்வேலி சாந்திஅக்ரோ நீட்ஸ் நிறுவன பங்களிப்புடன் 120 பயனாளிகளுக்கு வீட்டுதோட்ட உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டன

வேலை வாய்ப்பற்ற பாடசாலைக்கல்வியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்பினை கருத்தில் கொண்டு முதலீட்டு அபிவிருத்தி சபையுடன் இணைந்து தையல்¸ மற்றும் கணணி¸ பயிற்சி நெறிகள் நடாத்தப்பட்டமை.