LDSP திட்டத்தின் கீழ் புதிதாக் இரு கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டு வருவதுடன்¸வருமான உருவாக்கத்திற்கு ஏதுவாக வேலை பூர்த்தியடைந்ததும் வாடகைக்கு விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினம் சபையினால் கொண்டாடப்பட்டதுடன் இதன் போது சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு சிறந்த பெண் முயற்சியாளர்¸ சிறந்த வீராங்களை¸ சிறந்த பெண் கலை இலக்கியவாதி¸ சிறந்த பெண் சமூகசேவையாளர் மற்றும் சிறந்த கல்வி;கான விருது என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதிமேதகு ஐனாதிபதி அவர்களின் கருத்திட்டத்திற்கமைவாக “எழில்மிக கிராமம் வளமான வாழ்வு” செயற்திட்டத்தின் கீழ் ஆடியபாதம் வீதியை அழகுபடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாட்டில் பங்களித்தமை.