நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பல பிரிவுகள் தனித்தனியே இயங்கி வருகின்றன. இப்பிரிவுகளுக்கெல்லாம் நடுநாயகமாக விளங்குவது தாபனப்பிரிவாகும். இப்பிரிவில் அனைத்துப் பணியாளர்களின் சுயவிபரக்கோவைகள் இலக்கமிடப்பட்டு ஒழுங்குமுறையாக பாதுகாக்கப்படுவதுடன் அனைத்து பணியாளர்களையும் கண்காணித்து அலுவலகப்பாதுகாப்பை உறுதி செய்து அலுவலக ஒழுங்கு கட்டுப்பாட்டை பேணி அலுவலக சூழலை பணியாளர்கள் வினைத்திறனுடன் பணியாற்றும் வகையில் மாற்றி திணைக்களத்தலைவருடன் இணைந்து அலுவலக மேம்பாட்டை சீர்ப்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பது இப்பிரிவாகும். தாபனப் பிரிவின் முக்கிய கடமைகள் 1. பணியாளர்களின் சுயவிபரக் கோவையினைப் பேணல் 2. அனைத்து பணியாளர்களையும் மேற்பார்வை செய்தல். 3. தினவரவப் பதிவேட்டினைப் பேணல். 4. ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது அது தொடர்பான நடவடிக்கையினை மேற்கொள்ளல். 5. ஓய்வூதிய நடவடிக்கையினை மேற்கொள்ளல். 6. புகையிரத ஆணைச்சீட்டினை வழங்குதல். 7. பணியாளரின் விடுப்பு தொடர்பான கோவையினை பேணுதல். 8. பணியாளர் சொத்துக்கடன் பெறுவதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளல். 8. ஆளணி தொடர்பான விடயங்களை மேற்கொள்ளல். 9. சம்பளமாற்றியமைப்பு தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளல். 10. காப்புறுதி பெறுகைகளுக்கான நடவடிக்ககை. 11. பணியாளர் அலுவலக அடையாள அட்டையினை வழங்குதல். 12. சுற்றறிக்ககைள், நிலையியல் கட்டளைகள் பேணல். மேற்கூறிய கடமைகள் தொடர்பான விடயங்களின் சுருக்கமாக: ஒரு பணியாளர் பணியாற்றும் காலத்திலும் அவர் வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் அவரின் சேவைக்கால வரலாற்றைப் பேணிவரும் முக்கிய ஆவணமாக அவரது சுயவிபரக்கோவை காணப்படுகின்றது. ஒரு உத்தியோகத்தரோ, ஊழியரோ நிரந்தரமாக, தற்காலிகமாக, அமைய, பயிற்ச்சியாளராக புதிதாக இணைக்கும் போதோ அல்லது வேறு திணைக்களத்தில் அல்லது உள்ளூராட்சி மன்றத்தில் இருந்து இடமாற்றம் பெற்றுவரும் ஒரு பணியாளரோ முதலில் தரிசிக்கும் பிரிவு தாபனப்பிரிவாகும். பணியாளர் ஒருவரின் முதல் நியமனத்தில் இருந்து ஓய்வு பெறம் வரை (ஓய்வு பெற்ற பின்னரும்) ஒரு அலுவலரின் சுயவிபரக் கோவையுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் தாபனவிதிகளுக்கு அமைவாக கருமமாற்றி நிர்வாக ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பிரிவாகும். புதிதாக நியமனம் பெற்றுவரும் அனைத்து பணியாளர்களையும், இடமாற்றத்தில் வரும் பணியாளர்களையும் அவர்களுக்குரிய தினவரவுப் பதிவேட்டில் வருகையை உறுப்படுத்தல் வேண்டும். புதிதாக நிரந்தர நியமனம் பெற்று வருபவர்களை பதவியேற்பு தொடர்பான கடிதத்துடன் பதவியேற்புடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை பூரணப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்குட்படுத்திய சான்றிதழ் வந்த பின்னர் அனைத்தையும் இணைத்து நியமனத்தினை வழங்கிய திணைக்களத்துக்கு உரிய தொடர்பாடல் வழியாக அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொளடளல் வேண்டும். பின்னர் அப்பணியாளருக்குரிய கடமைப்பட்டியலை வழங்கி அவர் கடமையாற்றுவதற்குரிய தளபாட வசதியினை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும். இதனை விட விதவைகள் அநாதைகள் ஓய்வூதியத்திட்டத்திற்கான படிவத்தினை பூரணப்படுத்தி உரிய ஆவணங்களை இணைத்து அனுப்பிவைத்தல் வேண்டும். இதனைவிட அப்பணியாளருக்குரிய மாதாந்த வேதனத்தினை பெறுவதற்கான படிவங்களையும் பூரணப்படுத்தி திணைக்களத்தலைவரின் ஒப்புதல் பெற்று சம்பள முகாமை உதவியாளருக்கு வளங்குதல் வேண்டும். திணைக்களப் பரீட்சையில் தோற்றுவதற்குரிய காலங்களில் அதற்கான படிவங்களை பூரணப்படுத்திப் பெற்று உரியகாலத்தில் உரிய தொடர்பாடல் ஊடாக அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மேலும் பணியாளர் பெறும் சலூகைகளான விடுப்பு,கடன்கள், முற்பணங்கள், காப்புறுதிப் பெறுவனவுகள் பெறுவதற்கான வழிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் வேண்டும். மேலும் அனைத்து பணியாளர்கள் தொடர்பான தரவுளை ஒழுங்கு முறையாகப் பேணுவதுடன் அத்தகவல்களை உதவி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்திற்கோ, உள்ளூராட்சி திணைக்களத்துக்கோ, உள்ளூராட்சி அமைச்சுக்கோ, பிரதிப் பிரதம செயலகத்திற்கோ தரவுகளை வழங்குவதுடன் கோரப்படும் ஆவணங்களை சான்றுபடுத்தி அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கம் ஒரு முக்கிய பிரிவாக இப்பிரிவு விளங்கிவருகின்றது. அத்துடன் வருடாவருடம வெளிவரும் அரச, மாகாண, உள்ளூராட்சி சுற்றுநிருபங்கள், சம்பள மாற்றி அமைப்புக்கள், நிலையியல் கட்டளைகள்,வர்த்தமானி அறிக்கைகள் ஒழுங்காக பேணிப்பாதுகாத்து வருவதுடன் தேவைப்படும் வேளைகளில் அவற்றினை அவற்றின் மூலம் சீராக்கம் செய்வதற்கும் வழங்குதல் வேண்டும். மேலும் பதில், தற்காலிக, அமைய, பயிற்சியாளர்களுக்கான அனுமதியை பெறுவற்கும், அவற்றினை உரியகாலத்தில் புதுப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களை ஊழியர் சேமலாபத் திட்டத்தில் இணைப்பதற்கான படிவங்களை பூர்த்திசெய்து அவர்களுக்கான அங்கத்துவ அட்டையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும். மேலும் அனைத்து பணியாளர்களுக்குமான அலுவலக அடையாள அட்டையினை வழங்குவதற்கும் இப்பிரிவே பொறுப்பாகும். அத்துடன் பணியாளர்களின் ஒழுகாற்று நடவடிக்கை, எச்சரிக்கை கடிதம் வழங்குதல், இடைநிறுத்தம், பதவிவெறிதாக்கல், சேவைச் சான்றிதழ் வழங்குதல் போன்ற நடவடிக்கையினையும் இப்பிரிவே மேற்கொள்கின்றது.

நன்றி