வேலைப்பகுதி
நல்லூர் பிரதேசசபையானது பல்வேறு வழிகளில் வருமானங்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை அவற்றை பிரதேச மக்களின் அபிவிருத்திக்குச் செலவு செய்தும் வருகின்றது. அந்தவகையில் சபையால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும் பகுதியாக வேலைப்பிரிவு காணப்படுகின்றது.

அபிவிருத்தி செயற்பாட்டின் பெரும் பகுதி சபைநிதி மூலம் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் ஏனைய திட்டங்கள், மூலதன நன்கொடைகள் மூலமாக கிடைக்கும் நிதியினை அடிப்படையாகக் கொண்டும் நிறைவேற்றப்;பட்டு வருகின்றது. இந்நிதிகள் மூலமாக வீதி பராமரிப்பும் அபிவிருத்தியும், மயானப் புனரமைப்பு, சனசமூக நிலையங்களுக்கான அபிவிருத்தி மற்றும் புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இப்பிரிவில் தற்போது பணியாற்றுவோர் விபரம்

  •  திரு.ம.குபேந்திரதாஸ் – தொழில்நுட்ப உத்தியோகத்தர்
  •  திரு.து.பத்மராஜன் – தொழில்நுட்ப உத்தியோகத்தர்
  •  செல்வி.சி.லக்க்ஷி – முகாமைத்துவ உதவியாளர்
  •  செல்வி.ப.கஜேந்தினி – முகாமைத்துவ உதவியாளர்

வேலைப்;பகுதியின் முக்கிய செயற்பாடுகள் பற்றி………….

  • வேலைகள் தொடர்பாக பெறுகை நடைமுறைகளுக்கமைய கேள்வி கோரல்களை மேற்கொள்ளுதல்.
  • கொடுப்பனவு அறிக்கைகளை செவ்வைபார்த்து அறிக்கை சமர்ப்பித்தல்.
  • கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்களைத் தயாரித்தல்.
  • சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கோவைகளைப் பேணுதலும் அவை தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும்.
  • செயற்பாட்டு முன்னேற்ற அறிக்கை தயாரிப்பதற்கு உதவுதல்.
  • சபை வாகனங்களுக்கான கோவைகளைப் பேணுதலும் அவை தொடர்பாக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதலும்.
  • வாகன ஓட்டப்பதிவேடுகளை செவ்வை பார்த்தல் மற்றும் அவற்றை காலத்துக்கு காலம் கணக்காய்வுத் திணைக்களத்திற்கு அனுப்புதல்.

சபையால் மேற்கொள்ளப்பட்ட வேலைகள் 2008-2013

ROAD INVENTORY LIST

ROAD INVENTORY MAP

VEHICLES DETAILS